யாருக்கு முடி அதிகமா கொட்டும்? தடுக்க என்ன செய்யலாம்? டாக்டர் நித்யா விளக்கம்
முடி உதிர்வு என்பது பலருக்கும் பொதுவான பிரச்சனை. இதைச் சமாளிக்க பல்வேறு தீர்வுகள் உள்ளன. முடி உதிர்வுக்கு அடிப்படை காரணத்தை கண்டறிவது மிக முக்கியம் என்கிறார் டாக்டர் நித்யா.
முடி உதிர்வு என்பது பலருக்கும் பொதுவான பிரச்சனை. இதைச் சமாளிக்க பல்வேறு தீர்வுகள் உள்ளன. முடி உதிர்வுக்கு அடிப்படை காரணத்தை கண்டறிவது மிக முக்கியம் என்கிறார் டாக்டர் நித்யா.
யாருக்கு முடி அதிகமா கொட்டும்? தடுக்க என்ன செய்யலாம்? டாக்டர் நித்யா விளக்கம்
முடி உதிர்வு என்பது பலருக்கும் பொதுவான பிரச்சனை. இதைச் சமாளிக்க பல்வேறு தீர்வுகள் உள்ளன. முடி உதிர்வுக்கு அடிப்படை காரணத்தை கண்டறிவது மிக முக்கியம் என்கிறார் டாக்டர் நித்யா.
Advertisment
முடி உதிர்வுக்கு பொதுவான காரணங்கள்:
அதிக உடல் சூடு முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இரும்புச்சத்து, துத்தநாகம், பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து குறைபாடு முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம் முடி உதிர்வுக்கு பொதுவான காரணமாக உள்ளது. கர்ப்பம், பிரசவம் மற்றும் பிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முடி உதிர்வை ஏற்படுத்தும். கடுமையான ஷாம்புகள், அதிகப்படியான வெப்ப ஸ்டைலிங் (ஹேர் ட்ரையர், ஸ்ட்ரெய்ட்னர்), இறுக்கமாக முடி கட்டுதல், வறண்ட கூந்தலுக்கு முறையான பராமரிப்பு இல்லாதது போன்றவை. டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்கள் (அ) சில மருந்துகளின் பக்கவிளைவுகள் முடி உதிர்வை ஏற்படுத்தும். பரம்பரை காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படலாம் என்கிறார் டாக்டர் நித்யா.
முடி உதிர்வைச் சமாளிப்பதற்கான தீர்வுகள்
Advertisment
Advertisements
சமச்சீர் உணவு: வைட்டமின்கள், தாதுக்கள் (இரும்பு, துத்தநாகம்), பயோட்டின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். முட்டை, பச்சைப்பயறு, பனீர், சிக்கன், பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகள்: உடல் சூட்டை குறைக்க வெண்பூசணி சாறு, நெல்லிக்காய், கறிவேப்பிலை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடிப்பது: உடல் நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம்.
எண்ணெய் மசாஜ்: தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை சிறிது சூடாக்கி, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை தூண்டி, மயிர்க்கால்களை வலுப்படுத்தும். வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்யலாம்.
லேசான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்: கடுமையான இரசாயனங்கள் இல்லாத மைல்டான ஷாம்பூ மற்றும் நல்ல கண்டிஷனர்களைப் பயன்படுத்துங்கள். தினமும் ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
வெப்ப ஸ்டைலிங்கைத் தவிர்க்கவும்: ஹேர் ட்ரையர், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற வெப்பக் கருவிகளை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பயன்படுத்தும் போது வெப்பப் பாதுகாப்பிகளை உபயோகிக்கவும்.
மென்மையான சீப்பு: அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துங்கள். முடி ஈரமாக இருக்கும்போது சீவுவதைத் தவிர்க்கவும்.
ஹேர் மாஸ்க்: வெங்காயம் மற்றும் வெந்தயம், தேன், முட்டையின் வெள்ளைக் கரு, ஆப்பிள் சீடர் வினிகர் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.