இவங்களே சொன்னா தான் இந்த உண்மை வெளியில் தெரியும்! 2 ஆவது திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் ஃபோட்டோ கேலரி

சிலருக்கு இரண்டாவது திருமணம் ரகசியமாக நடக்கும்.

kollywood celebrities second marriage photos : பிரபலங்களின் திருமண புகைப்படங்கள் என்பது எப்போதுமே இணையத்தில் அதிகம் தேடப்படுவது வழக்கம், அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளின் இரண்டாவது திருமணம் சற்று ஆடம்பரமாக நடந்து விட்டால் போதும் அதை விமர்சிப்பதற்காகவே பலரும் தேடி சென்று அவர்களின் திருமண வீடியோக்கள், மற்றும் புகைப்படங்களை பார்ப்பார்கள்.

இதுஒரு புறம் இருக்க சிலருக்கு இரண்டாவது திருமணம் ரகசியமாக நடக்கும். அவர்கள் வெளியில் அறிவித்தால் தான் அது அவர்களுக்கு இரண்டாவது திருமணம் என்ற உண்மையே வெளியில் தெரியும். அந்த வகையில் இன்று ஃபோட்டோ ஸ்டோரி ஸ்பெஷலாக இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட பிரபலங்களின் கலர்ஃபுல் ஃபோட்டோக்களை பார்க்கலாம் வாருங்கள்.

1. இயக்குனர் விஜய் :

பிரபு தேவா, விஜய், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும், நடிகை அமலா பாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கிடையேயான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவரும் தங்களுக்கான பாதையில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே இயக்குனர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஏ.எல்.விஜய்க்கும், ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த மாதம் சிம்பிளாக திருமணம் நடைப்பெற்றது.

 

2. நடிகை பூஜா:
சில் ஆண்டுகளுக்கு முன், முதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை பூஜா ராமச்சந்திரன், கடந்த வருடம் நடிகர் ஜான் கொக்கனை, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.நடிகர் ஜான் கொக்கனை, பிரபல நடிகையின் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. நடிகர் பிரகாஷ் ராஜ்:

பிரகாஷ்ராஜ் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையான லலிதாகுமாரியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்தோம் என கூறினர்.

அதன்பிறகு போனி வர்மா என்ற டான்ஸ் மாஸ்டரை மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். பிரகாஷ் பிள்ளைகளின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது.

4. திவ்யா உன்னி.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை திவாய் உன்னி. இவர் கடந்த 2002ம் ஆண்டு மருத்துவர் சுதீர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அமெரிக்காவில் திவ்யா உன்னி நடனப் பள்ளி நடத்தியது அவரது கணவர் சுதீர் சேகரன் என்பவருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, திருமணமான 14 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். அதன்பின்பு திவ்யா, அருண்குமார் மணிகண்டன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

5. நவீன்:

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

 

6. செளந்தர்யா:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். சென்னையில் மிக பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைப்பெற்றது/.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close