சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு!

குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரள அரசிடம் இருந்து விருது பெற்றவர்

celebrities sons and daughters : தந்தை செய்த அதே தொழிலை மகனும் செய்வது மிகவும் இயல்பு. இது சினிமா துறையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. சிவாஜி கணேஷன் அவர்களுக்கு பிறகு பிரபு, பிறகு பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என்பது போல தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், தெலுங்கு சினிமா என அனைத்து மொழி திரையுலகிலும் இது பின்தொடரப்பட்டு வருகிறது.

நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரின் வாரிசுகள் பலர் ஏற்கனவே சினிமாவுக்கு வந்துள்ளனர். நடிகர்கள் தனுஷ், சிம்பு, விக்ரம் பிரபு, சிபிராஜ், கவுதம் கார்த்திக், அதர்வா, அருண் விஜய், சாந்தனு, துல்கர் சல்மான், சண்முக பாண்டியன், நடிகைகள் சுருதிஹாசன், ஐஸ்வர்யா, கார்த்திகா, துளசி, விஜய லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் என்று அந்த பட்டியல் நீள்கிறது.

தெலுங்கு திரை உலகில் எல்லாம் இரு குடும்பங்களின் மத்தியில் அடுத்தடுத்து வாரிசு நடிகர்கள் களமிறக்கப்பட்டு ஓர் போரே நடந்து வருகிறது. சினிமா என்பது நமது நாட்டில் வெறும் கேளிக்கை என்பதை தாண்டி மாபெரும் புகழ், மக்கள் மத்தியில் நெருக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பொருத்திப்பார்க்கும் படியான ஓர் செயலாக இருந்து வருகிறது.

பழைய லிஸ்டை விட்டு விடுங்கள். இப்போது இந்த தலைமுறையில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள் யார் என்று பார்ப்போமா?

1. துருவ் விக்ரம்:

நடிகர் விக்ரம், தனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இதற்காக தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதையை தேர்வு செய்து இருந்தார். முதலில் பாலா இந்த படத்தை இயக்கி முடிக்க, பல்வேறு சர்ச்சைக்ளுக்கு பிறகு அந்த படம் ரீலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் முயற்சியை கைவிடாத விக்ரம், அதே படத்தின் கதையை வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் வரவிருக்கிறது.

2. பிரணவ்:

மோகன்லால் மகன் பிரணவ், ஆதி என்ற மலையாள படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.இவர் ஏற்கனவே புனர் ஜனி என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரள அரசிடம் இருந்து விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. அமியா

கிரிக்கெட் வீரர் கபில் தேவின் மகள் அமியா பாலிவுட்டில் நாயகியாக களமிறங்க உள்ளாராம். கபிர் கான் இயக்க இருக்கும் 83 என்ற படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறாராம்.23 வயதான அமியா இப்படத்தில் நடிப்பதற்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகளிலும் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருவதாக கூறப்படுகிறது.

4. ஜான்வி கபூர்:

தென்னிந்திய மொழிகளில் நடித்து மிகப்பெரிய புகழை அடைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி ஏற்கனவே தடாக் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி விட்டார். இவரை தமிழில் அறிமுகமாக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழிலும் தாயின் பெயரை காப்பாற்றுவேன் என ஜான்வி உறுதி மொழி எடுத்துள்ளார்.

5. ஜுனைத் கான்:

இந்திய துறையுலகின் நடிப்பின் உச்சபட்சம் என்றால் அது ஆமிர் கான் தான். இவரது மகன் ஜுனைத் கானை திரையுலகில் களமிறக்க ஆமிர்கானே தயாராக தான் இருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் ஜுனைத் கானை திரையில் காணும் வாய்ப்புகள் ஏராளம் என பாலிவுட் வட்டாரம் கூறுகின்றன

6. விஜித்:

மகன் விஜித்தை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் தங்கர்பச்சான். இந்தப் படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், யோகிராம் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாளை இதே போல் வேறு ஒரு லிஸ்டில் ஃபோட்டோ ஸ்டோரியை ரசிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close