celebrities with rolls royce : இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது.அழகும், கம்பீரமும், வேகமும் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர இந்தியாவில் அப்போது இருந்த பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின.ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும், எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறு ஒவ்வொரு காரையும் ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து கொடுக்கிறது. எனவேதான், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பிற கார்களிடத்தில் இருந்து அதிகம் வேறுபடுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'Bespoke' கார் மாடல்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாங்குவதை பிரபலங்கள் அதிகம் விரும்புகின்றனர். விருது நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துக் கொள்ளும் போது பிரபலங்கள் இந்த காரை வந்து இறங்குவதை அதிகம் ரசிக்கின்றனர். பிரபலங்கள் வைத்திருக்கும் கார்களின் கலர்ஃபுல் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
1. பிரியங்கா சோப்ரா:
ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான இந்திய பெண் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார் என்றால், அது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்தான்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-43.jpg)
2. அமிதாப் பச்சன்:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-44.jpg)
3. உதயநிதி ஸ்டாலின்:
நடிகரும்,தயாரிப்பாளருமான வெளிநாட்டு இறக்குமதி ரக காரான,விலையுயர்ந்த “ஹம்மர்” காரை பயன்படுத்தி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-45.jpg)
4. விஜய்:
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் “பேண்டம்” ரக காரை விஜய் வைத்துள்ளார்.இதன் விலை 3 கோடிகள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-46.jpg)
5. அஜித்:
நடிகர் அஜித் மிகப் பெரிய கார் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும்.இவர் வீட்டில் கார் கண்காட்சியே நடத்தும் அளவிற்கு நிறைய கார்கள் வரிசையில் நிற்கும். காரில் அஜித்துக்கு மிகவும் பிடித்த கலர் வெள்ளை தான்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-29.jpg)
இன்றைய ஃபோட்டோ கேலரி ஸ்டோரில் பிரபலங்களின் கார் வகைகளை பார்த்தோம். நாளை மீண்டும் புதிய வகையான ஃபோட்டோ ஸ்டோரியை பார்க்கலாம்.