உங்கள் செல்போன் உங்கள் காதுகளை பதம் பார்க்காமல் இருக்க செய்ய வேண்டியவை இது தான்…

ஒவ்வொரு போனின் வோல்ட் திறன் மதிப்பிற்கு ஏற்றவாறே சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

Cell Phone Charger Fire
Cell Phone Charger Fire

Cell Phone Charger Fire : சென்னை சூளைமேட்டில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு செல்போன் சார்ஜர் வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த மெத்தை, தலையணை உள்ளிட்டவை எரிந்து தீக்கிறையானது.  தீயை அணைக்க முற்பட்ட போது, விடுதியின் உரிமையாளர் மகேஷ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. புகை மூட்டத்தால் சில பெண்கள் மயங்கி விழுந்தனர்.

உரிமையாளர் மற்றும் அந்த பெண்கள் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதீத செல்போன் பயன்படுத்துதல், சார்ஜ் போட்டு வைத்தல், பேட்டரி மாற்றுதல் போன்ற காரணங்களால் ஆங்காங்கே செல்போன் வெடித்து சிதறுகிறது.

Cell Phone Charger Fire : செல்போன்கள் வெடிக்காமல் இருக்க சில டிப்ஸ் :

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள் இல்லாமல் ஒரு நாளும் இங்கு ஓடுவதில்லை. அதுவும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிக்டாக், மியூசிக்லீ என்று 24 மணி நேரமும் இந்த போனுக்கு வேலை தான்.

அதிக பயன்பாடு, அதிக நேரம் நிலைத்து நிற்கும் பேட்டரி என்று நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணம் என்று செல்போன்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

பேட்டரி, செல்போன், செல்போன் சார்ஜர் போன்றவை வெடிக்காமல் எப்படி போன்களை உபயோகப்படுத்துவது என்று சொல்லத்தான், அல்லது தெரிந்து கொள்ளத்தான் யாருக்கும் நேரம் இல்லை.

செல்போனை சார்ஜ்ஜில் போட்டுக் கொண்டே போன் பேசுவது, போனை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.

எப்போதும் போனை சார்ஜ்ஜில் போட்ட வண்ணம் இருப்பது தவறு.

10%க்கு குறைவாக இருக்கும் போது மட்டும் செல்போனை சார்ஜில் போடுவது நல்லது.

உங்கள் போனிற்கு தரப்பட்டுள்ள தரமான சார்ஜர்களை பயன்படுத்துங்கள்.

சார்ஜர் தொலைந்துவிட்டது, நண்பன் எடுத்துவிட்டு சென்றுவிட்டான் என்று சந்தைகளில் கிடைக்கும் மட்டமான சார்ஜர்களை வாங்கி, உங்களில் விலையுயர்ந்த போன்களுக்கு சார்ஜ் போடாதீர்கள்.

ஒவ்வொரு போனின் வோல்ட் திறன் மதிப்பிற்கு ஏற்றவாறே சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. அதனால், மற்றவர்களின் சார்ஜர்களை உபயோகப்படுத்தவது நலம் இல்லை.

போன்களின் பேட்டரி எப்போது வேண்டுமானாலும் லீக் ஆகலாம். அப்படி ஆகும் பட்சத்தில் கம்பனி பேட்டரி இல்லாமல், எதோ கிடைக்கும் பேட்டரி என்று எதையும் போட்டுவிடக் கூடாது.

நெட் ஆன் செய்து, அப்படியே போன் பேசுவதையும் தவிர்த்துவிடுங்கள்.

தேவையில்லாத ஆப்களை ரிமூவ் செய்வதும், ரீ ஸ்டார்ட், ரீசெட் செய்வதும் உங்கள் போன் நீண்ட நாள் உழைப்பதற்கு உதவும்.

மேலும் படிக்க : வெளியூரில் இருந்து வேலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருகின்றதா விடுதிகள்

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cell phone charger fire how to avoid your smartphones from getting explode

Next Story
வேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க5 Herbal Tea Recipes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express