பெண்களுக்கு ஓர் நற்செய்தி : ஒரே ஒரு ஊசியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தீர்வு
Cervical cancer : ஏழை நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கு ஒருமுறை மருந்து கொடுக்கும் பிரச்சாரம் நல்ல திருப்புமுனையாக அமையும்.
Cervical cancer : ஏழை நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கு ஒருமுறை மருந்து கொடுக்கும் பிரச்சாரம் நல்ல திருப்புமுனையாக அமையும்.
ஏழை நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கு ஒருமுறை மருந்து கொடுக்கும் பிரச்சாரம் நல்ல திருப்புமுனையாக அமையும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பான புதிய ஆராய்ச்சியில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்(HPV) தடுப்பு மருந்தை ஒருமுறை கொடுப்பதே, நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அமெரிக்க புற்றுநோய் அமைப்பின் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிக்கையில் வெளியான தகவலில், அதிக முறை கொடுக்கத்தேவையில்லை, ஒருமுறை கொடுப்பதே சக்தி வாய்ந்ததாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து எண்பத்து இரண்டு பேரில் (பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள்) பாதி பேருக்கு ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை ஊசிகள் போடப்பட்டது. 15 முதல் 19 வயது வரை உள்ள வளரிளம் பெண்களுக்கு ஒன்று அல்லது அதற்கும் அதிகமான முறை மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பப்பை வாய் முன் ஆக்கிரமிப்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. இது மருந்து கொடுக்கப்படாதவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக நடந்த ஆய்வை பொறுத்தவரையில், ஒருமுறை மருந்து வழங்கப்பட்ட 1.62 சதவீதம் பேர், இரண்டு முறை மருந்து வழங்கப்பட்ட 1.99 சதவீதம் பேர் மற்றும் மூன்று முறை மருந்து கொடுக்கப்பட்ட 1.86 சதவீத பேரைவிட தடுப்பு மருந்து கொடுக்கப்படாத, 2.65 சதவீதம் பேருக்கு முன் ஆக்கிரமிப்பு கர்ப்பப்பை வாய் தொடர்பான நோய்கள் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் வருவதற்கான ஆபத்தும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களுக்கு முறையே 36, 28 மற்றும் 34 சதவீதம் என குறைவாக இருந்தது. இந்த அறிக்கையை எழுதிய டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அனா ரோட்ரிக்விஸ் சர்வதேச பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இளம் வயதினருக்கு தடுப்பு மருந்து கொடுப்பது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிராக நீண்ட நாள் பாதுகாப்பை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறதாக அனா கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தைப்பொறுத்தவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களை அதிகளவில் பாதிக்கக்கூடிய நோய்களுள் நான்காவது இடத்தில் உள்ளது. குறைவான மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில், 90 சதவீதம் பேர் இந்நோயால் இறக்கின்றனர். நோய் வராமல் தடுப்பது, ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது, அதிக திறன் வாய்ந்த நோய் கண்டறியும் வசதி, சிகிச்சை முறைகள் மூலம் உலகளவில் இதனை குறைக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஏழை நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கு ஒருமுறை மருந்து கொடுக்கும் பிரச்சாரம் நல்ல திருப்புமுனையாக அமையும். அது எளிய மற்றும் குறைந்த செலவுடைய அதிகமுறை மருந்துகொடுக்கும் திட்டத்தை விட சிறந்தது.
லேன்சட் உலக சுகாதாரப் பத்திரிக்கையை பொறுத்தவரையில், இந்தியாவிலும், சீனாவிலும் 2018ம் ஆண்டு அதிகளவிலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இது உலகளவில் நடந்துள்ள கர்ப்பப்பை வாய் மரணங்களில் 35 சதவீதத்திற்கு பங்களிப்பு செய்கிறது.