கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி. தடுப்பூசிகளை, செலுத்திகொள்வது அவசியம் என பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் ஹெச்.பி.வி தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாடு முழுவதும், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் ஹெச்.பி.வி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவக அரங்கில் கான்கேர் ஹெச்.பி.வி மற்றும் கேன்சர் கான்கிளேவ் 2025 எனும் கருத்தரங்கத்தை நடத்தியது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/06/conclave-3-2025-07-06-13-15-08.jpeg)
இக்கருத்தரங்கில் பிரபல மருத்துவர்கள், நந்தினி குமரன்,சித்ரா பட், ஆர்த்தி, செந்தில்குமார், ஜெயவர்தனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட முண்ணனிcp மருத்துவர்கள் கலந்து கொண்டு, கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும், ஹெச்.பி.வி புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் நந்தினி குமரன் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் ஹெச்.பி.வி தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கர்ப்பபை வாய் புற்றுநோய் காரணமாக, நமது நாட்டில் ஆண்டுக்கு 1.23 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாதிக்கபடுகின்றனர். இதில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவில் சுமார் 90 சதவீகிதம் ஆசனவாய் புற்றுநோய்களும், 63 சதவிகிதம் ஆண்குறி புற்றுநோய்களும் ஹெச்பிவி காரணமாக ஏற்படுகின்றது. இதற்கு தீர்வாக தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதற்கான தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.
இவ்வகை தடுப்பூசிகளை ஆண்கள், மற்றும் பெண்கள் இருவரும் போட்டுகொள்வது கர்ப்பப்பை புற்றுநோய், ஹெச்பிவி புற்றுநோய் போன்ற தொற்றுகளை தடுக்கின்றது என தெரிவித்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/06/conclave-4-2025-07-06-13-15-08.jpeg)
மேலும் இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குநர் பராக் தேஷ்முக் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது நிறுவனம் குறைந்த விலையில் உயர்தரமான தடுப்பூசிகளை தயாரித்து வழங்கி வருகின்றது எனவும், தற்போது அதிகரித்து வரும் கர்ப்பபை புற்றுநோய் மற்றும் ஹெச்பிவி தொடர்பான நோய் தொற்றுகளை தடுக்க, சேர்வாவேக் எனும் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது இதனை பயண்படுத்துவதால் கர்ப்பபை புற்றுநோய் மற்றும் ஹெச்பிவி தொடர்பான புற்றுநோய்களை ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் தடுக்கலாம் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்