பல சுவைகள் கொண்ட மண்பாண்டம் தேநீர் வேண்டுமா?

இங்கு கிடைக்கும் பானங்களும், தேநீரும் மண்பாண்டங்களில் பரிமாறப்படுவதே இந்த கடையின் சிறப்பம்சமாகும். மண்பாண்டங்களில் பானங்களை அருந்துவதால் புதிய நறுமண சுவையை தேநீர் பெறுகிறது, அதை வாடிக்கையாளர்கள் உணரும் அறியவாய்ப்பை இங்கு பெறலாம்.

Chai sutta bar, chai sutta bar tea shop, chai sutta bar first tea shop in chennai, chai sutta bar first tea shop in tamil nadu, ச்சாய் சுட்ட பார் தேநீர் கடை, ச்சாய் சுட்ட பார் டீ கடை, சாய் சுட்ட பார், மண்பாண்டம் டீ கடை, pottery tea shop, pottery tea shop in chennai, tea shop, new tea shop in chennai

இந்திய மக்களுக்கு பிடித்த பானங்களில் முதன்மையாக வந்து நிற்பது தேநீர் என்று கூறினால் மிகையாகாது. தேநீருக்கு ஊரில் பல்வேறு கடைகள் இருந்தாலும், வித்தியாசமான வடிவில் தேநீர் வழங்கினால் மக்களின் கவனம் ஈர்க்கப்படுவது இயல்பான ஒன்று தான். அப்படி மக்களின் கவனத்தை ஈர்த்த கடைகளில் ஒன்று, சென்னையின் கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ச்சாய் சுட்ட பார்’ ஆகும்.

2016 ஆம் ஆண்டு இந்தோரில் ச்சாய் சுட்ட பாரின் முதல் கிளை, அனுபவ் துபேயினால் (ச்சாய் சுட்ட பாரின் நிறுவனர்) ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மூன்று நாடுகளில், நூற்றிற்கும் மேற்பட்ட நகரங்களில் பரவி, தற்போது இருநூறு கடைகளுக்கு மேல் இயங்குகிறது. சென்னையில் கோபாலபுரத்தில் அமையப்பட்டுள்ள இந்த கடை, தமிழ்நாட்டில் முதல் கிளையாக இயங்குகிறது.

இங்கு கிடைக்கும் பானங்களும், தேநீரும் மண்பாண்டங்களில் பரிமாறப்படுவதே இந்த கடையின் சிறப்பம்சமாகும். மண்பாண்டங்களில் பானங்களை அருந்துவதால் புதிய நறுமண சுவையை தேநீர் பெறுகிறது, அதை வாடிக்கையாளர்கள் உணரும் அறியவாய்ப்பை இங்கு பெறலாம்.

முகேஷ், கோபாலபுரத்தில் உள்ள குறிப்பிட்ட கடையின் உரிமையாளர் கூறியதாவது:

இங்கு விதவிதமான சுவைகளில் தேநீர் மற்றும் மற்ற பானங்கள் கிடைக்கும். ஒவ்வொன்றும் மது அல்லாத சுவையாக மட்டும் தான் பயன்படுத்துகிறோம். மண்பாண்டங்களை உபயோகிப்பதால் குயவர்கள் சமூகத்திற்கு வேலைவாய்ப்பும் வருமானமும் பெற்றுத்தரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது.

ஆரம்ப கட்டத்தில், ஊடகத்தில் பிரபலமானவர்கள் மற்றும் உணவு பதிவரின் சந்தைப்படுத்தும் நுட்பத்தினால் எங்களுக்கு வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. வாய் வார்த்தை மூலமாகவும் எங்கள் நிறுவனம் பிரபலம் அடைய தொடர்ந்தது.

இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பதினாறிலிருந்து முப்பது வயதிற்குள் இருப்பதனால், இங்கு ஆரம்ப விலையே ரூபாய் பதினைந்திலிருந்து தொடங்குகிறது. எங்கள் கடைக்கு அருகில் எட்டு பள்ளிக்கூடங்களும், மூன்று கல்லூரிகளும் இருப்பதால், வியாபாரம் நன்றாகவே செல்கிறது. மலிவான விலையில் இருப்பது மட்டுமல்லாமல், பயணித்து வருவதற்கு எளிமையாக இருப்பதனால், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chai sutta bar pottery tea shop first at chennai in tamilnadu

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com