சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் இன்று பேரூராட்சி கூட்டம் தலைவர் சேங்கைமாறன் மற்றும் செயல் அலுவலர் சங்கர் கணேஷ் முன்னிலையில் 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் நடுவே பேரூராட்சியில் கடந்த 30 வருடங்களாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய முனியாண்டி என்ற துப்புரவு தொழிலாளி இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சரிவர பணியை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விருப்ப ஓய்வு அளித்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் இவரை கூட்ட அரங்கிற்கு செல்ல அலுவலர் மற்றும் பேரூராட்சி சேர்மன் வரவழைத்து கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் முன்னிலையில் அவருக்கு மாலை மரியாதை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினார்கள்.
அத்துடன் மட்டும் நிற்காமல் அவரை பேரூராட்சி தலைவர் செங்கே மாறன் தனது சொகுசு காரில் தான் அமரும் முன் இருக்கையில் அமர வைத்து அவர் பின்னால் அமர்ந்து வீடு வரை கொண்டு சென்று அவரை வீட்டில் இறக்கி விட்டார் இச்சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து முனியாண்டியின் மனைவி கூறுகையில் எனது கணவர் 30 வருட காலமாக பேரூராட்சிகள் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார். எனது கணவரை ஐயா பேரூராட்சி தலைவர் காரில் அழைத்து வந்து மரியாதையாக வீட்டில் இறக்கி விட்டது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.