/indian-express-tamil/media/media_files/RmOOasMl5pa63AA5wFm0.jpg)
Chaitra Reddy
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி.
’கல்யாணம் முதல் காதல் வரை’, ‘சுப்ரதா பரிணயம்’ என தமிழ், தெலுங்கு சீரியல்களில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும் சைத்ராவை, தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது ‘கயல்’ சீரியல் தான். தவிர அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்திருக்கிறார்.
சைத்ரா ரெட்டி மீடியா துறையில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவாகி உள்ளது.
இதுகுறித்து தன் இன்ஸ்டாவில் அவர் எழுதிய நீண்ட எமோஷனல் பதிவில், ’இந்த இன்கிரிடிபிள் துறையில் எனது 10 வருட பயணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது, என் இதயம் மிகுந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது. இயக்குனர், கேமிரா மேன், புரொடியூசர், மேக்கப் ஆர்டிஸ் ஸ்டைலிஸ்ட்ஸ், எனது சக நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உங்கள் அயராத அர்ப்பணிப்பும் ஆர்வமும் ஒவ்வொரு கணத்தையும் சாத்தியமாக்கியுள்ளன.
எனது குடும்பமாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி, உங்கள் நிலையான ஆதரவும் அன்பும் என்னை ஒவ்வொரு உயர்வுக்கும் கொண்டு சென்றன. 19 வயதில் இந்தப் பயணத்தைத் தொடங்கினேன், இந்த டெஸ்டினி எனக்காகது என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் படிப்படியாக, உங்கள் அன்பு என்னை இங்கே கொண்டு வந்தது.
இந்த கனவை அழகாக நனவாக்கிய அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. வெற்றி ஒரு இலக்கு அல்ல; அது ஒரு பயணம். இதைக் கருத்தில் கொண்டு, இந்த நம்பமுடியாத வேலையைத் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் இன்னும் கடினமாக உழைத்து, உங்கள் ஒவ்வொருவரையும் மகிழ்வித்து ஊக்கப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். ஐ லவ் யூ ஆல்” இப்படி சைத்ரா உணர்ச்சிப் பொங்க அதில் எழுதியுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த ரசிகர்களும், சீரியல் பிரபலங்களும் சைத்ராவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.