சுண்டல், கீரை சேர்த்த சுவையான கட்லெட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான அளவு
வெள்ளை கொண்டைக் கடலை-200 கிராம்
ஏதேனும் ஒரு கீரை – 1 கட்டு
வெங்காயம் – 100 கிராம்
உருளைக் கிழங்கு – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
சீரகம்- ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – 200 கிராம்
செய்முறை
கொண்டைக் கடலையை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும். இப்போது வேக வைத்த சுண்டல் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு 1 சுற்று அரைக்கவும்.
அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கீரை, வெங்காயம் சேர்த்து பிசையவும். அடுத்து கட்லெட் வடிவத்தில் தட்டி வைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட் கலவையை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியமான கட்லெட் ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“