ரொம்ப ஈசியா சந்திரகலா ஸ்வீட், இப்படி செய்யுங்க. ரொம்ப சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் மைதா மாவு
2 டேபிள் ஸ்பூன் நெய்
1 சிட்டிகை உப்பு
கால் கப் தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் நெய்
கால் கப் பால்
3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
1 கப் பால் பவுடர்
கால் கப் முந்திரி பருப்பு
கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
1 கப் சர்க்கரை
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை தனியாக மூடி வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய், பால், சர்க்கரை, பால் பவுடர் சேர்த்து கிளரவும். 3 நிமிடங்கள் சேர்த்து கிளரினால் கோவா கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து பாகு செய்யவும். ஒரு கம்பி பதம் வரும் வரை காத்திருக்கவும். பிசைந்த மாவில், சிறிய வட்டமாக மாற்றவும், அதில் கோவா வைக்கவும். இதற்கு மேலாக இனியொரு வட்டமான மாவை அதற்கு மேலாக வைக்கவும். தொடர்ந்து சுற்றி உள்ள மாவை பட்டன் போல் செய்யவும். தற்போது இதை எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். தொடர்ந்து செய்து வைத்த ஜீராவில் சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“