"எந்த ஆங்கிளில் நான் வில்லியாகத் தெரிகிறேன்?" - 'சந்திரலேகா' நாகஸ்ரீ ஓபன் டாக்!
Chandralekha Serial Actress Lekha Nagasri Lifestyle அவருடைய ஃபேஸ் கட் லேகா கதாபாத்திரத்திற்குத்தான் பொருந்தும் என்று முடிவு செய்து லேகாவாக மாற்றிவிட்டனர்.
Chandralekha Serial Actress Lekha Nagasri Lifestyle அவருடைய ஃபேஸ் கட் லேகா கதாபாத்திரத்திற்குத்தான் பொருந்தும் என்று முடிவு செய்து லேகாவாக மாற்றிவிட்டனர்.
Chandralekha Serial Actress Lekha Nagasri Lifestyle Tamil News
Chandralekha Serial Actress Lekha Nagasri Lifestyle Tamil News : ஏழு வருடங்களைக் கடந்து இன்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா மெகா தொடர். விரையில், அதிக எபிசோடுகளை கொண்ட தமிழ் மெகா தொடர் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கப்போகும் இந்த தொடரின் முக்கிய முன்னாள் வில்லி லேகா எனும் நாகஸ்ரீ.
Advertisment
இந்தத் தொடர் ஆரம்பத்திலிருந்து அவ்வளவு ஏன், இந்த சீரியல் உருவானதிலிருந்து லேகா கதாபாத்திரத்தின் மீது அளவில்லா வில்லத்தனத்தைக் கொட்டித்தீர்த்திருப்பார் இயக்குநர். சந்திரா கதாபாத்திரத்துக்காக, பெங்களூரிலிருந்து தமிழகம் வந்த நாகஸ்ரீ, அவருடைய ஃபேஸ் கட் லேகா கதாபாத்திரத்திற்குத்தான் பொருந்தும் என்று முடிவு செய்து லேகாவாக மாற்றிவிட்டனர்.
Advertisment
Advertisements
"கன்னட சீரியலிலும் வில்லி, தமிழிலும் வில்லியா! எந்த ஆங்கிளில் என்னைப் பார்த்தால் வில்லியாகத் தோன்றுகிறது?" என்று கொந்தளிக்கும் லேகாவிற்கு சவாலான கதாபாத்திரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட நாகஸ்ரீ, தற்போது அதே சந்திரலேகா சீரியலில் பாசிட்டிவ்வாக மாறியுள்ளார். தொடக்கத்தில் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே லேகாவை பார்த்து வந்தாலும், இப்போது மக்கள் மனதில் ஸ்வீட் கேர்ள் லேகாவாக இருக்கிறார்.
தமிழ் மொழி தெரியாமல் ஒரு வருடம் சந்திரலேகா சீரியலில் நடித்திருந்தாலும், ஓர் புத்தாண்டின் உறுதி மொழியாகத் தமிழ் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணிய நாகஸ்ரீ, இப்போது சரளமாகத் தமிழ் மொழி பேசுபவராக இருக்கிறார்.
திரைப்படம் பிடிக்குமா சீரியல் பிடிக்குமா என்று கேட்டால், "நடிப்பதுதான் என்னுடைய ஆசை, கனவு, லட்சியம் எல்லாம். அது எந்த மீடியம் என்றாலும் சரிதான். திரைப்படம் என்பது திருவிழா சாப்பாடு போல. ஆனால், சீரியல் தினசரி சாப்பாடு. திரைப்படத்தில் நல்ல சவாலான கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். பொதுவாகவே சீரியலில் நமக்கு நல்ல சவாலான ரோல்ஸ் கிடைக்கும். அதனால், இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil