Chandralekha Serial Actress Shwetha Bandekar Lifestyle Tamil News
Chandralekha Serial Actress Shwetha Bandekar Lifestyle Tamil News : தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே கூடிய விரைவில் அதிகப்படியான எபிசோடுகளை கடந்து இன்றும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் மெகா தொடர் பட்டியலில் இடம்பெறப்போகிறது 'சந்திரலேகா'. 2014-ம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டு, ஏழு ஆண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து, பல தமிழ்நாட்டு மக்களின் செல்ல மகளாகவே மாறியிருக்கும் ஸ்வேதாவின் சில ஸ்வீட் பக்கங்களை இங்கே காணலாம்.
Advertisment
என்னதான் சீரியல்களில் ரெக்கைகட்டி பறந்துகொண்டிருந்தாலும், ஸ்வேதா அறிமுகம் ஆனது திரைப்படத்தில்தான். ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர், தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
Advertisment
Advertisements
ஒரு திரைப்படத்தில் நடித்தாலே, அந்தக் கதாபாத்திரத்திலிருந்து மீண்டு வருவது நடிகர்களுக்குக் கஷ்டம் என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகும் சந்திரா கதாபாத்திரம், ஸ்வேதாவை பாதிக்காமல் இருக்குமா என்ன? சாந்தமான ஸ்வேதா, இப்போது போல்ட் ஸ்வேதாவாக மாறியிருக்கிறார். காரணம் சந்திரா கதாபாத்திரம்.
வீட்டில் இருக்கும் நேரத்தில் ஷார்ட் வீடியோ செய்வதுதான் பொழுதுபோக்காம். எப்போதாவது சாமிக்கும் இவர், மொறுமொறு தோசை சுடுவதில் கில்லாடி. பள்ளி, கல்லூரி நாட்கள் தொடங்கி இப்போது வரை இவருக்கு ஒரு ப்ரபோசல் கூட வந்ததில்லையாம். இது மட்டும் நம்ப முடியவில்லை!
இவருடைய ட்ரீம் பாய் எப்படி இருக்க வேண்டும் என்றதற்கு, "என்னைவிட உயரமாக இருக்கவேண்டும். ஆனால், நிறத்தில் என்னைவிடக் குறைந்துதான் இருக்கவேண்டும். அதேபோல, சுருட்டை முடி எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. நல்ல ஸ்ட்ரெயிட் தலைமுடி இருக்கனும். என்னைப்போல இரண்டு பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். அவ்வளவுதான் என்னுடைய எதிர்பார்ப்பு" என்று பட்டென நிறைவு செய்கிறார்.
இவருக்கு அழுகை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது மிகவும் கடினமாம். ஏனென்றால், கண்ணீர் அவ்வளவு எளிதில் இவருக்கு வராது. அப்படியே கிளிசரின் உபயோகித்தாலும், இடது கண்களில் மட்டும்தான் தண்ணீர் வருமாம். அது இன்னும் எரிச்சலான விஷயம்தான். அதேபோல கேமராவை பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்து தனியாக ரொமான்ஸ் செய்வதும் கடினமாக இருக்கும் என்று ஃபீல் பண்ணுகிறார் ஸ்வேதா எனும் உங்கள் சந்திரா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil