Advertisment

பயணிகள் கவனத்திற்கு: திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் காரணமாக திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Train schedule

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, வரும் ஜனவரி 16, 23 30 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் மாலை 6:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06070, எழும்பூர் வரை செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஜனவரி 17, 24, 31 மற்றும் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகிய நாட்களில் வண்டி எண் 06069 திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 03.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்றார் போல் பயணிகள் அனைவரும் தங்கள் பயண நேரத்தை சீரமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tirunelveli Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment