சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் சென்னா மசாலா, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
முதலில் கொண்டைக் கடலையினை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 மணிநேரம் அதாவது இரவே ஊறவைக்கவும். பிறகு ஊறிய கொண்ட கடலையினை ஒரு குக்கரில் போட்டு 4 அல்லது 5 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்.
பிறகு மசாலா தயார் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் அதனுடன் இஞ்சி, பூண்டு மற்றும் மேல் கூறிய அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய மசாலாவை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பச்சைமிளகாய் போட்டு தாளித்து அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை கொட்டி 5 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும். மசாலா நன்றாக கொதித்ததும் அதில் நாம் குக்கரில் வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 5 நிமிடம் வரை மூடி வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“