இனி இந்த சென்னா மசாலாவை வீட்டில் செய்யலாம். ரொம்பவும் ஈசியான ரெசிபி.
தேவையான பொருட்கள்
150 கிராம் கொண்டைக்கடலை
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு
கால் ஸ்பூன் சீரகம்
1 அன்னாச்சிப் பூ
2 கிராம்பு
2 ஏலக்காய்
2 பட்டை
1 பிரிஞ்சி இலை
2 பெரிய வெங்யாகம் நறுக்கியது
1 தக்காளி
அரை ஸ்பூன் இஞ்சி- பூண்டு பேஸ்ட்
2 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் சீரகத் தூள்
கால் ஸ்பூன் கரம் மசாலா பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை : கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சீரகம், அன்னாசிப் பூ, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்க வேண்டும், தொடர்ந்து இஞ்சி- பூண்டு விழுதை சேர்த்து கிளரவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள்பொடி, மல்லிப் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, சீரகப் பொடி சேர்த்து கிளரவும். தற்போது இதில் அவித்த கொண்டைக்கடலையை சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“