Chapathi recipe Tamil Video, chapathi soft tips: சோடா உப்பு உள்ளிட்ட எந்த கெமிக்கலும் சேர்க்காமல் சப்பாத்தியை சாஃப்டாக, உப்புகிற விதமாக செய்ய முடியும். நம்புங்கள்! அதற்கான செய்முறை இங்கே!
Advertisment
சப்பாத்தி இன்று நம் வீடுகளில் தவிர்க்க முடியாத உணவாகியிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகிற உணவும்கூட. பேச்சிலர்கள் பலர் இதன் செய்முறை எளிது என்பதால் இதை தேர்வு செய்கிறார்கள்.
chapathi recipe Tamil Video: சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி
இந்தச் சப்பாத்தியை சாஃப்டாக, உப்புகிற விதமாக செய்யும் முறையை இங்கு காணலாம்.
Advertisment
Advertisements
சப்பாத்திக்கு மாவு தயார் செய்யும்போது அதில் ஒரு கப் கோதுமை மாவிற்கு இரண்டு ஸ்பூன் மைதா சேர்க்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால், அதைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசையலாம்.
பிறகு உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கரண்டியால் கிளறவும். பின் கைகளால் மாவை நன்கு பிசைந்து கொண்டு சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையால் 15 நிமிடங்கள் நன்கு அடிக்கவும்.
அப்போதுதான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்டு மாவு மிருதுவான பதத்தில் வரும். பின்னர் அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊற வைக்கவும்.
பின் உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தயார் செய்யவும். தோசைக்கல் சூடானதும் திரட்டிய சப்பாத்தியை கல்லில் போட்டு இரு புறமும் பிரட்டவும். நன்கு அழுத்தும்போது சப்பாத்தி உப்பி வரும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். இந்த முறையில் செய்து பாருங்கள், சாஃப்டான உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சப்பாத்தி ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"