இரவு மீந்து போன சப்பாத்தி வைத்து சுவையான லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி - 6
நெய் - 4 ஸ்பூன்
பால் - 4 ஸ்பூன்
பால் பவுடர் - 3 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி கலவை - அரை கப்
செய்முறை
முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் அரைத்து எடுத்த சப்பாத்தி பொடியை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்கவும். இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை கொஞ்சம் சேர்த்து ஈரமாக்கிக் கொள்ளவும்.
அடுத்ததாக பால் பவுடரையும், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வையுங்கள். இதோடு உங்களுக்கு தேவையான நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் நட்ஸ் வகைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தும் சேர்க்கலாம். இப்போது மீதமுள்ள நெய்யையும் சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து மிதமான சூட்டில் எப்போதும் போல் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான சப்பாத்தி லட்டு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“