Advertisment

உருளைக்கிழங்கு ரகசியம்… சாஃப்ட் சப்பாத்திக்கு இப்படியும் வழி இருக்கு!

செஃப்கள் கூட சிலம் சில சமயம் சொதப்புவது இயல்புதான். அப்படி சொதப்பல் சப்பாத்தி மாவிலும் சாஃப்ட்டான சப்பாத்தி சுடுவதற்கு ஒரு உருளைக் கிழங்கு ரகசியம் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chapati Recipe in Tamil, potato using for Soft Chapati Recipe, சப்பாத்தி, சாஃப்ட் சப்பாத்தி, உருளைக்கிழங்கு, சாஃப்ட் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, சப்பாத்தி மாவு, Soft Chapati Recipe, potato using tips for soft chapati making, how to making soft chapati, sappathi, chappathi, soft chapati, buff chapati, chapati flours

சமையல் ஒரு கலை என்றால் சப்பாத்திக்கு மாவு பிசைவதும் ஒரு கலைதான். ஏனென்றால், நன்றாக மாவு பிசைய தெரிந்தவர்கள்கூட சில சமயங்களில் சப்பாத்தியை சுட்டு எடுக்கும்போது அப்பளமாகவும் அடையாகவும் எடுக்கிறார்கள். சப்பாத்தி சுடுவதில் ஜாம்பவான்கள்கூட சில சமயம் சப்பாத்தியை சாஃப்ட் ஆக சுட முடியாமல் போகிறது. செஃப்கள் கூட சிலம் சில சமயம் சொதப்புவது இயல்புதான். அப்படி சொதப்பல் சப்பாத்தி மாவிலும் சாஃப்ட்டான சப்பாத்தி சுடுவதற்கு ஒரு உருளைக் கிழங்கு ரகசியம் இருக்கிறது. சாஃப்ட் சப்பாத்தி சுடுவதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறது. அந்த டிப்ஸ்களை உங்களுக்காக இங்கே தருகிறோம்.

Advertisment

சப்பாத்தி நன்றாக உப்பி சாஃப்ட்டாக வருவதற்கு சப்பாத்தி மாவை எப்படி அரைக்க வேண்டும் என்பதற்கு உங்களுக்காக இங்கே ஒரு டிப்ஸ் தருகிறோம்.

சாஃப்ட்டான சூப்பரான அருமையான அழகான சுவையான சப்பாத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் டிப்ஸ்:

சப்பாத்தி மாவை சொதப்பலாக பிசைந்து விட்டீர்களா? சப்பாத்தி அப்பளம் போல வருகிறதா? கவலைப்பட வேண்டாம். அந்த சப்பாத்தி மாவை அப்படியே வைத்து விடுங்கள். ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள். அடை குக்கரில் போட்டு நன்றாக வேகவைத்து தோலை உரிவித்துவிட்டு உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அந்த சப்பாத்தி மாவோடு போட்டு நன்றாக பிசைந்து, மீண்டும் சப்பாத்தியை செய்து பாருங்கள். சப்பாத்தி பொசு பொசுவென உப்பி சாஃப்ட்டாக வரும். அருமையாக இருக்கும்.

குறிப்பு: நீங்கள் எவ்வளவு மாவு பிசைந்து வைத்து இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு தேவையான உருளைக்கிழங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கப் மாவு என்றால், ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு போதுமானது.

இரண்டாவது டிப்ஸ்:

வறமிளகாய் 2, வேர்கடலை 1 ஸ்பூன், முந்திரி 6, இந்த மூன்று பொருட்களையும் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பிசையும்போது தேவைக்கு ஏற்ப இந்த மசாலா பொடியை சப்பாத்தி மாவில் கலந்து பிசைந்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி வித்தியாசமாக சுவையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். பிறகு, தொடர்ந்து பயன்படுத்துவீர்கள்.

publive-image

மூன்றாவது டிப்ஸ்:

சிலருக்கு சப்பாத்தி உப்பி வந்தால்தான் சப்பாத்தி நன்றாக இருக்கிறது என்ற மன நிலையே வரும். அதற்கு சப்பாத்தி மாவை வழக்கம்போல பிசைந்து வைத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல முதலில், மாவின் உள்ளே குழிசெய்து கொள்ள வேண்டும். இதையடுத்து, அந்த மாவை அப்படியே மோதகம் போல செய்ய வேண்டும்‌. இப்போது இந்த கொழுக்கட்டையின் மேல் பக்கத்தில் இருக்கும் எக்ஸ்ட்ரா மாவை தனியாக எடுத்து விட வேண்டும். மீதமிருக்கும் மாவை அப்படியே உருண்டை பிடித்து, அப்படியே திரட்ட வேண்டும். நடுவில் ஒரு லேயர் உருவாகி இருக்கும்.

சப்பாத்தியை மெதுவாக நடுவில் மட்டும் அழுத்தித் தேய்க்காமல் பக்கவாட்டில், லேசாக அழுத்தம் கொடுத்து வட்ட வடிவத்தில் தேய்த்து சப்பாத்தியை கல்லில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும், மீண்டும் மறுபக்கம் திருப்பி போட்டு ஓரங்களில் மட்டும் லேசாக அழுத்தம் கொடுத்து பாருங்கள். சப்பாத்தி பொசுபொசுவென உப்பி வரும். சப்பாத்தி உப்பி வரவேண்டுமென்றால், அடுப்பை கொஞ்சம் வேகமாக தான் வைக்க வேண்டும். இப்போது நீங்களும் சுடலாம் உப்பலான சப்பாத்தி.

நான்காவது டிப்ஸ்:

சப்பாத்திகாக வீட்டில் கோதுமை வாங்கி அரைக்கும்போது 2 கிலோ கோதுமை, 1 கிலோ சம்பா கோதுமையை சேர்த்து அரைத்தால் ஆரோக்கியமான சப்பாத்தி கிடைக்கும். 5 கிலோ கோதுமைக்கு, 50 கிராம் சோயாபீன்ஸ் பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் சப்பாத்தி செய்தால் நிச்சயமாக சப்பாத்தி வேற மாதிரி சூப்பராக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Chapati Chappathi Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment