Chapati tamil video, soft chapati recipe: சப்பாத்தி அனைவரும் விரும்பும் உணவாக இருக்கிறது. சிறுவர்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள் என்றால், பெரியவர்கள் பலருக்கு உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக கோதுமை சப்பாத்தியை சாப்பிட்டு ஆக வேண்டியிருக்கிறது.
Advertisment
இதற்காக ஒவ்வொரு முறையும் மாவு பிசைந்து கொண்டிருப்பது சிரமமான காரியம். ஒரு முறை பிசையும் மாவை 24 மணி நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்ள முடியும். அதாவது, காலையில் பிசைகிற மாவை இரவு டின்னருக்கும்கூட ப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம். அல்லது இரவில் தயாரிக்கும் மாவை, மறுநாள் காலைக்கு பயன்படுத்த முடியும்.
Soft chapati recipe: சாஃப்ட் சப்பாத்தி
Advertisment
Advertisements
ஆனால் அதற்கு அந்த மாவை எப்படி ஃப்ரெஷ்ஷாக வைக்கிறோம் என்பது முக்கியம். சப்பாத்தி மாவை ஃப்ரெஷ்ஷாக வைப்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சப்பாத்தி மாவை சரியாக பிசைந்து செய்யாவிட்டால் சப்பாத்தி சரியாக ஒருபோதும் வராது. சப்பாத்தி மாவை பிசைந்து குறைந்தது 30 நிமிடமாவது ஊறவைக்க வேண்டும். வட்டமாக தேய்த்து சூடான தவாவில் போட்டு எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான மாவை தயாரித்து எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மாவை பிசைந்து பாத்திரத்திலோ, குளிர் சாதனப் பெட்டியிலோ வைக்கும் போது அலுமினியம் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் ரேப்பரை பயன்படுத்தி வைக்க வேண்டும். காற்று புகாத வண்ணம் நன்றாக சுற்றி வைக்க வேண்டும். காற்று புகாத கண்டெய்னரில் வைப்பதில் முக்கியம்.
காற்று புகாத வண்ணம் ஜிப் லாக் பையிலோ அல்லது காற்று புகாத டப்பாவிலோ வைத்து பிரிட்ஜில் வைக்கலாம். மாவு பிசையும் போது தேவைக்கு பார்த்து தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் கூடுதலாக மாவு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
மாவை அலுமினியம் ஃபாயில் அல்லது காற்று புகாத டப்பாவில் வைப்பதற்கு முன் எண்ணெய் தடவி பின் அதில் பிசைந்த மாவினை வைக்க வேண்டும். குளிர் சாதன பெட்டியில் வைக்கும்போது எப்போதும் கண்டெய்னரில் வைத்து வைக்க வேண்டியது அவசியம்.
இந்த நடைமுறைகளை கடைபிடித்தால், சப்பாத்தி டேஸ்டாக இருக்கும். ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சப்பாத்தி மாவு பிசைய வேண்டியதில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"