நம் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் இரவுக்கு சப்பாத்தி தான் உணவாக இருக்கும். மீதமுள்ள சப்பாத்தி மாவை அடுத்த நாள் பயன்படுத்த ஃபிரிட்ஜில் வைப்போம். அப்படி ஒன்றிரண்டு நாட்களில் மாவு கெட்டு விட்டால் தூக்கி எறிந்து விடுவோம். இது எல்லா வீடுகளிலும் நடக்கும் வழக்கமான ஒன்று.
இங்கே, சப்பாத்தி மாவை சேமித்து வைக்க சில எளிய குறிப்புகள் உள்ளன. இது ஒரு வாரத்திற்கு எந்த மாவையும் புதியதாக வைத்திருக்க்கும்.
மாவை பிசைந்த பிறகு, அதை பிளாஸ்டிக் ரேப்பரில் இறுக்கமாக மூடி அல்லது ஏர் டைட் கன்டெய்னரில் வைக்கவும். ஏனெனில் காற்றின் வெளிப்பாடு மாவை உலர வைக்கும். ஈஸ்ட் செயல்பாடு மற்றும் நொதித்தல் செயல்முறையை மெதுவாக்க ஃபிரிட்ஜில் மாவை சேமிக்கவும்.
ஒரு சில நாட்களுக்குள் நீங்கள் மாவைப் பயன்படுத்த போவதில்லை என்றால், அதை உறைய வைக்க வேண்டும்.
மாவை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் பிளாஸ்டிக் ரேப்பர் அல்லது அலுமினியத் தாளில் இறுக்கமாக மூடவும்.
உறைய வைப்பதற்கு முன் இந்த தனித்தனி போர்ஷன்களை, ரீசிலபிள் பிளாஸ்டிக் பையில் (resealable plastic bags) வைக்கவும். நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்கும் போது ஃபிரீசரில் இருந்து மாவை கரைக்கவும்.
மாவை சீலபிள் பிளாஸ்டிக் பையில் அல்லது ஏர் டைட் கன்டெய்னரில் வைக்கவும், இதனால் காற்று மேற்பரப்புக்கு வராமல் தடுக்கவும். இது ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் மாவை உலர்த்துவதை தடுக்கிறது. சீல் செய்வதற்கு முன் பை அல்லது கன்டெய்னரில் இருந்து அதிகப்படியான காற்றை அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாவின் மேற்பரப்பில் லேசாக ஆலிவ் எண்ணெய் அல்லது வெஜிடபிள் ஆயில் தடவவும். இது காற்று தொடர்பைக் குறைக்கும் ஒரு தடையை உருவாக்க உதவுகிறது மற்றும் மாவின் வெளிப்பகுதி உலராமல் தடுக்கிறது. எண்ணெய், மாவுக்கு ஒரு நுட்பமான சுவையையும் சேர்க்கிறது.
அனைத்து மாவையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த நீங்கள் திட்டமிடவில்லை என்றால், சேமிப்பதற்கு முன் அதை சிறிய பகுதிகளாகப் பிரிப்பது ஒரு சிறந்த யோசனை. இது உங்களுக்கு தேவையான அளவு மட்டுமே எடுக்க அனுமதிக்கிறது, காற்றில் தேவையற்ற வெளிப்பாட்டைத் தடுக்கிறது மற்றும் மீதமுள்ள மாவின் தரத்தை பராமரிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“