சப்பாத்தி மற்றும் தேங்காய் இருந்தால், இப்படி ஸ்வீட் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
அரை கப் தேங்காய்
4 சப்பாத்தி
2 ஏலகாய்
அரை கப் வெல்லம்
10 முந்திரி
10 திராட்சை
4 ஸ்பூன் நெய்
செய்முறை : மிக்ஸியில் சப்பாத்தி, தேங்காய், ஏலக்காய் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும். இதை தனியாக எடுத்துகொள்ளவும். இதில் இன்னும் நெய் சேர்த்து அரைத்த சப்பாத்தியை வதக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்யவும். இதை இந்த கலவையில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். தொடர்ந்து வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“