சுவையான சீஸ் பால்ஸ் ரெசிபி இப்படி செய்யுங்க. இது மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
3 உருளைக்கிழங்கு
2 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்
கால் கப் பிரட் கிரம்ஸ்
½ ஸ்பூன் மிளகு தூள்
கால் டீஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
2 டேபிள் ஸ்பூன் மைதா
உப்பு
கால் ஸ்பூன் மிளகாய் தூள்
தண்ணீர்
பிரட் கிரம்ஸ் தேவையான அளவு
சீஸ் துண்டுகள்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : உருளக்கிழங்கை வேக வைக்க வேண்டும். அதிகமாக வேக வேண்டாம். அதை தோலை நீக்கி, துருவிக் கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கில், துருவிய கேரட், பிரட் கிரம்ஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளரவும். இனியொரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்த்து, அதில் மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். பிசைந்த உருளைக்கிழங்கு கலவையை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். அதனுள் சீஸ் துண்டுகளை வைத்து உருண்டைகளாக்க வேண்டும். அதை மைதா மாவு கரைசலில் முக்கி, பிரட் கிரம்ஸில் முக்கி, தனியாக எடுத்து வைக்கவும். இந்த உருண்டைகளை 15 நிமிசங்கள் அப்படியே விடவும். தொடர்ந்து இதை எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான சீஸ் பால்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“