சுவையான சீஸ் பிரெஞ் பிரெட் டோஸ்ட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 4
முட்டை - 2
சீஸ் - தேவையான அளவு
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பிரட்டை எடுத்து அதை 2 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் அந்த 2 பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைக்கவும்.
இதே போன்று அனைத்து பிரட் துண்டுகளுக்கும் செய்யவும். இப்போது ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில் உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து இப்போது தோசைக் கல் அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் தடவி உருகியதும் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் முட்டை கலவையில் நனைத்து, தோசைக் கல்லில் போட்டு வேக வைத்து பொன்னிறமாக எடுத்தால் சுவையான சீஸ் பிரெஞ் பிரெட் டோஸ்ட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“