பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் நான்கில் மூன்றில் ஒரு பங்கை சமையலறையில் செலவிடுகிறார்கள். எனவே, சமையலறையில் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த உதவும் சில ஹேக்குகளை அறிந்திருப்பது அவசியம்.
குக்கிஸ்ட் வாவ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், கெட்டுப் போகக்கூடிய உணவுகளை நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்க சில ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளது.
சீஸ்
நீங்கள் அதை பிளாஸ்டிக் கவரில் சேமித்தால் அது தவறு. இது உங்கள் சீஸை மூச்சுத்திணற வைக்கிறது. இது சரியான பாதுகாப்பிற்காக, உலராமல் இருக்க சுவாசிக்க வேண்டும்.
அதை காகிதத் தோலில் போர்த்தி, ஃபிரிட்ஜின் மேல் அலமாரியில் வைத்தால் 7 நாட்கள் வர நீடிக்கும்.
செலரி, கேரட்
செலரி மற்றும் கேரட்டை நீங்கள் பிளாஸ்டிக் பைகளில் இனி சேமிக்க வேண்டாம்! அவற்றைச் சரியாகக் கழுவிய பின், கண்ணாடி ஜாடியில் போட்டு தண்ணீரில் நிரப்பவும். மூடி வைக்கவும், ஃபிரிட்ஜில் வைக்கவும், அவை 7 நாட்கள் வரை நீடிக்கும்.
மூலிகைகள்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா காய்ந்து போனால் கவலைப்பட வேண்டாம்! ஐஸ் ட்ரேயில் வைத்து ஆலிவ் எண்ணெயைச் சேர்ப்பதன் அவற்றை உறைய வைக்கலாம். இதை நேரடியாக உங்கள் சமையலில் பயன்படுத்த தயாராக இருக்கும்.
சாலட்
சாலட்டை வாங்கிய நாள் போல ஃப்ரெஷ்ஷாக வைக்கலாம்.
ஒரு கண்ணாடி பாத்திரம் அல்லது ஜிப் லாக் பையில் அதை காகித தாளால் மூடி வைக்கவும். காகிதம் ஈரப்பதத்தை உலர்த்தும் மற்றும் நீண்ட நேரம் புதியதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“