செஃப் சஞ்சீவ் கபூரின் இன்ஸ்டாகிராம் கணக்கு, சுவையான ரெசிபிகள், எளிமையான அதே சமயம் பயனுள்ள சமையல் குறிப்புகள் நிறைந்தது. இப்போது உங்கள் சமையல் விளையாட்டை ஒரு புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்லுங்கள்.
சிறிய உரல் எப்படி பயன்படுத்துவது?
அனைவரது வீட்டு கிச்சனிலும் இந்த சிறிய உரல் இருக்கும். ஆனால் இதை பொருட்களை இடிக்கவும், நசுக்கவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர், இதனால் சில மசாலா உரலில் இருந்து கீழே சிதறும். இது பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு.
இனி அப்படி செய்யாமல், வீடியோவில் உள்ளபடி உரலில் பொருட்களை வைத்து அதை லேசாக இடித்து, பிறகு கிரைண்டரில் அரைப்பது போல சூழற்றவும்.
பலர் புதிய உரலை சீசனிங் செய்யாமல் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
சீசனிங் செய்ய உரலில், பச்சை அரிசி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக நசுக்கவும். இதை ஓரமாக வைத்துவிட்டு, உரலை சிறிது தண்ணீரில் கழுவவும். தேவைப்படும் போது உரலை பயன்படுத்தவும், என்று செஃப் சஞ்சீவ் கபூர் பரிந்துரைத்தார்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதாரப் பயிற்சியாளருமான கரிஷ்மா ஷா கூறுகையில், மிளகு, மசாலா, மூலிகைகள், அரிசி, நட்ஸ் மற்றும் பிற விதைகள் போன்ற பல்வேறு பொருட்களை அரைக்க அல்லது நசுக்க நீங்கள் ஒரு சிறிய ஆட்டுக்கல் பயன்படுத்தலாம், என்றார்.
மேலும், உரல் சுத்தம் செய்ய இரண்டு வழிகளையும் அவர் பரிந்துரைத்தார்.
புதிய வாசனையை நீங்கள் விரும்பினால், அதை சூடான நீரில் கழுவலாம். இல்லையெனில், பொருட்களின் சுவை மற்றும் நறுமணத்தைப் பாதுகாக்க நீங்கள் அதை சாதாரணமாக கழுவி, மீண்டும் அதே மசாலா அரைக்க பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“