ஒரு முறை செப் தாமு சொல்வது போல் மிளகாய் பஜ்ஜி செய்து சாப்பிடுங்க. செம்மயா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 ½ கப் கடலை மாவு
அரை கப் அரிசி மாவு
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
பெருங்காயம்
கேசரி கலர்
சோடாமாவு ஒரு சிட்டிகை
கருவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா சிறிய அளவு
பஜ்ஜி மிளகாய் 8
செய்முறை: முதலில் மிளகாய்யை கூர்மையான கீழ் பகுதியில் 3 ஆக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கட்டி பெருங்காயம் துண்டு, கேசரி கலர், சோடா மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இதில் கரமசாலா சேர்த்து, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் மிளகாய்யை முக்கி, சூடான எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.