மல்லிப்பூ இட்லி, சாஃப்ட் சப்பாத்தி, மொறுமொறு ரவா தோசை: செஃப் தாமு சொல்லும் சூப்பர் குக்கிங் ரகசிங்கள்
குறிப்பாக, சில நேரங்களில் புளிப்பு அதிகமாகிவிடுவது, காரம் அல்லது உப்பு அதிகமாகிவிடுவது, சப்பாத்தி கடினமாகிவிடுவது, இட்லி பஞ்சுபோல வராமல் போவது போன்ற சிக்கல்கள் சமையலின் சுவையையே கெடுத்துவிடும்.
குறிப்பாக, சில நேரங்களில் புளிப்பு அதிகமாகிவிடுவது, காரம் அல்லது உப்பு அதிகமாகிவிடுவது, சப்பாத்தி கடினமாகிவிடுவது, இட்லி பஞ்சுபோல வராமல் போவது போன்ற சிக்கல்கள் சமையலின் சுவையையே கெடுத்துவிடும்.
சமையலில் அனுபவம் வாய்ந்தவர்கள் முதல் புதிதாக சமைப்பவர்கள் வரை பலருக்கும் பொதுவான சில சவால்கள் உண்டு. குறிப்பாக, சில நேரங்களில் புளிப்பு அதிகமாகிவிடுவது, காரம் அல்லது உப்பு அதிகமாகிவிடுவது, சப்பாத்தி கடினமாகிவிடுவது, இட்லி பஞ்சுபோல வராமல் போவது போன்ற சிக்கல்கள் சமையலின் சுவையையே கெடுத்துவிடும். இதையெல்லாம் எளிமையாக எப்படி சரிசெய்யலாம் என்று செஃப் தாமு அருமையான குறிப்புகளை வழங்கியுள்ளார்.
குழம்பில் புளிப்பு அதிகமானால் என்ன செய்வது?
Advertisment
சாம்பார், காரக்குழம்பு, மீன்குழம்பு என எந்த குழம்பாக இருந்தாலும் சில நேரங்களில் புளிப்பு அதிகமாகிவிடும். என்ன செய்வது? கவலை வேண்டாம்! ஒரு சிறு துண்டு வெல்லத்துடன் சிறிது மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து புளிப்பு அதிகமான குழம்பில் ஊற்றிவிடுங்கள். இந்த கலவை புளிப்புத்தன்மையை குறைத்து சரியான சுவையை கொடுக்கும்.
காரத்தை குறைப்பது எப்படி?
குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், இரண்டு தக்காளிகளைப் பிழிந்து, கோலிகுண்டு அளவு புளியுடன் சேர்த்து குழம்பில் போட்டால் காரம் குறைந்துவிடும்.
Advertisment
Advertisements
உப்பை சரி செய்வது எப்படி?
உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு எலுமிச்சை பழம் சாறுடன், அரை டீஸ்பூன் தனியாதூள் மற்றும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உப்பு அதிகமான குழம்பில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட்டால், உப்பு சரியாக இருக்கும். எப்பொழுதும் குழம்பில் உப்பு போடும்போது அரை உப்பு மட்டும் போடுங்கள். வாயில் போட்டுப் பார்த்து உப்பை சரி செய்துகொள்வது நல்லது.
மல்லிப்பூ இட்லி செய்வது எப்படி?
இட்லி மாவு கெட்டியாக இருக்கிறது, இட்லி கல்லு போல் வருகிறது என வருத்தப்படாதீர்கள். 4 கப் இட்லி அரிசிக்கு 1 கப் உளுத்தம்பருப்பு, 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைக்கவும். இட்லி மாவை கொஞ்சம் கொரகொரப்பாகவும், உளுத்தம்பருப்பை தண்ணீர் விடாமலும் அரைத்து எடுக்கவும். பின்னர், உளுந்து மாவு, இட்லி அரிசி மாவு, உப்பு சேர்த்து கையால் நன்றாகக் கலக்கவும். பின்னர் மூடி வைத்துவிடுங்கள். காலையில் இட்லி மாவு புளித்து பொங்கி வந்திருக்கும். மாவை நன்றாகக் கலக்கி, இட்லி தட்டில் ஈரத்துணியை வைத்து இட்லி ஊற்றினால் மல்லிப்பூ போன்ற மென்மையான இட்லி தயார்!
மென்மையான சப்பாத்தி செய்வது எப்படி?
சப்பாத்தி கடினமாக வருகிறதா? 1 கப் கோதுமை மாவுக்கு அரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, ஒரு கை மாவை மீண்டும் சேர்த்து பிசைந்தால் மென்மையான மாவு தயார். சப்பாத்திக்கு மாவு திரட்டி, இருபுறமும் தோசைக்கல்லில் சுட்டு, நேரடியாக நெருப்பில் காட்டினால் மிருதுவான ஃபுல்கா சப்பாத்தி தயார்.
மொறுமொறுப்பான ரவா தோசை செய்வது எப்படி?
1 கப் மைதா மாவுக்கு அரை கப் ரவை, ஒரு கைப்பிடி அரிசி மாவு (அல்லது ஒரு குழிக்கரண்டி இட்லி மாவு), சீரகம், இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை சேர்த்துத் தண்ணீர் போலக் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை நன்றாக சூடேற்றி, மாவை தெளிப்பது போல ஊற்றி திருப்பிப் போட்டால் மொறுமொறுப்பான ரவா தோசை தயார். தேங்காய் சட்னி, கடலை சட்னி அல்லது துவையலுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்!
பொங்கலுக்கான குறிப்பு
பொங்கல் செய்யும்போது, 1 கப் பச்சரிசிக்கு அரை கப் பாசிப்பருப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்தால் பொங்கல் மிகவும் மென்மையாக இருக்கும். தாளிக்கும் போது மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்த மசாலா பொங்கலின் மேல் மிதந்து வந்தால் தான் சுவையாக இருக்கும்.
சமையலறை குறிப்புகள்
வாரத்திற்கு ஒருமுறையாவது சமையலறை அலமாரிகளில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வது அவசியம்.
ஜாடிகளில் உள்ள பொருட்கள் என்ன என்பதை எழுதி ஒட்டி வைத்தால் எளிமையாக இருக்கும்.
குக்கரில் உள்ள அழுக்கை நீக்க, வெயிட்டையும் ரப்பரையும் வெந்நீரில் கழுவ வேண்டும்.
சமையல் முடிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள் பொரிக்கும்போது எண்ணெய் பொங்கி வழிந்தால், ஒரு கோலிகுண்டு அளவு புளியை எண்ணெயில் போட்டால் அது பொங்காது.
மீந்துபோன பாலை பன்னீர் அல்லது தயிர் செய்ய பயன்படுத்தலாம். பாலை பன்னீர் செய்ய வினிகர் சேர்த்தால் பால் திரிந்துவிடும். திரிந்த பாலை மஸ்லின் துணியில் இறுக்கிப் பிழிந்தால் பன்னீர் தயார். தயிர் உறை ஊற்றும்போது உறைந்து போகவில்லை என்றால் ஒரு பச்சை மிளகாயை சேர்த்தால் தயிர் நன்றாக உறைந்துவிடும்.