Advertisment

இனி தக்காளி கிடைச்சா விடாதீங்க: இப்படி புலாவ் செய்யுங்க: செப் தாமு ரெசிபி

ஒரு முறை செப் தாமு சொல்வதுபோல தக்காளி புலாவ் செய்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saeasa

ஒரு முறை செப் தாமு சொல்வதுபோல தக்காளி புலாவ் செய்து பாருங்க. 
தேவையான பொருட்கள்
2 கப் பாஸ்மதி அரிசி 
வெங்காயம் 2 கை அளவு 
தக்காளி 2 கை அளவு 
பச்சை மிளகாய் 4 
தயிர் 1 கப் 
புதினா ஒரு கை
கொத்தமல்லி ஒரு கை
மிளகாய் தூள் 3 ஸ்பூன் 
மஞ்சள் தூள் அரை ஸ்பூன் 
பட்டை 2 
லவங்கம் 2 
பிரியாணி இலை 2 
ஏலக்காய் 2 
3 ஸ்பூன் எண்ணெய் 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, லவங்கம், பிரியாணி இலை,  ஏலக்காய் சேர்த்து கிளரவும். நன்றாக வறுபட்டதும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து தயிர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து கிளரவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளரவும். உப்பு சேர்க்கவும். 4 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து எடுக்கவும்.  
 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment