தக்காளி சாதம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? 5 நிமிட த்தில் சுவையான தக்காளி சாதம் எப்படி சமைப்பது என்று செஃப் தாமு தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்
வடித்த சாதம்- ஒரு கப்
தக்காளி- 2
வெங்காயம்- 2
பூண்டு- 4 பல்
இஞ்சி- சிறிது துண்டு
மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
தனியா தூள்- 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
மிளகு தூள்- அரை டீஸ்பூன்
எண்ணெய்- அரை குழிக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
இப்போது அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும். பூண்டு வாசனை வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து தொக்கு மாதிரி வதக்கிக் கொள்ளவும்.
இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகுத் தூள் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசம் நீங்கி, நன்கு சுண்டி வந்த்தும் அதில் கொத்தமல்லித் தழை சேர்த்து கிளறவும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு அதில், வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான லஞ்ச் பாக்ஸ் தக்காளி சாதம் ரெடி.
இதனுடன் அப்பளம், வத்தல், உருளைக் கிழங்கு வறுவல், வேகவைத்த முட்டை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!
(குறிப்பு: ஒருவேளை நீங்கள் பெங்களூர் தக்காளி பயன்படுத்தினால் கடையில் கொஞ்சம் புளி அல்லது எலுமிச்சை தேவை.
நாட்டுத் தக்காளி பயன்படுத்தினால் புளி, எலுமிச்சை தேவையில்லை. )
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“