செஃப் தாமு ஸ்பெஷல் வர மிளகாய் கோழி வறுவல் எப்படி செய்வது என்பது இங்கே….
Advertisment
தேவையான பொருட்கள்
கோழி- அரை கிலோ
வெங்காயம்- 100 கிராம்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
சோம்பு- ஒரு டீஸ்பூன்
தனியா தூள்- 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
வர மிளகாய்- 10
உப்பு- தேவையான அளவு
கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொறிந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் ஒரு கைப்பிடி அளவு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும், கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இப்போது சிக்கனை சேர்க்கவும். (சிக்கன் சேர்த்து 7வது நிமிடத்தில் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விடலாம். 7 நிமிடங்களுக்கு மேல் வெந்தால் நிறம் மாறிவிடும்)
தேவையான அளவு உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் 3 டீஸ்பூன் தனியா தூள் சேர்த்து, வதக்கிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பிறகு, தேங்காய் பால் (நீங்கள் விரும்பினால்) சேர்த்து கிளறிவிட்டு, சரியாக 7 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான வர மிளகாய் கோழி வறுவல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“