செப் தீனா செய்வதுபோல் கருப்பு உளுந்து வைத்து, இட்லி பொடி செய்யுங்க.ல் செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்தம் பருப்பு – 600 கிராம்
கடலை பருப்பு – 250 கிராம்
கருப்பு எள்ளு – 60 கிராம்
உப்பு – 30 கிராம்
வத்தல் – 150 கிராம்
பெருங்காயம் – 5 கிராம்
நல்லெண்ணை – 3 ஸ்பூன்
1 ஸ்பூன் கடுகு- உளுந்தம் பருப்பு
வெங்காயம் 2
15 பல் பூண்டு
கருவேப்பிலை தேவையான அளவு
செய்முறை : உளுந்தம் பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். தொடர்ந்து கடலை பருப்பை தனியாக வறுக்க வேண்டும். தொடர்ந்து கருப்பு எள்ளை வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் தனியாக வறுக்க வேண்டும். தொடர்ந்து வத்தலை வறுக்க வேண்டும். எள்ளுடன் உப்பு சேர்த்து வறுத்துகொள்ளவும். இந்நிலையில் இவை ஆறியதும், பெருங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து எண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம் நறுக்கியது, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து கிளரவும். பூண்டை நாம் இடித்து சேர்க்கலாம். இதில் இட்லி சேர்த்து, இந்த பொடியை நாம் சேர்த்து பொடி இட்லி செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“