சில சமயங்களில் குறிப்பாக பண்டிகை மற்றும் திருமண காலங்களில். நமக்குப் பிடித்தமான உணவுகளை எதிர்க்க முடியாமல் போகும். ஆனால் வறுத்த, உப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகமாக உட்கொள்வது வீக்கம், வாயு மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். அதற்கான வீட்டு வைத்தியத்தை நீங்கள் அடிக்கடி தேடுகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம்.
சமையல் கலைஞர் மேக்னா கம்தார், எளிதான ஜப்பானிய 'கரேலு நுஸ்கா' ரெசிபி முயற்சி செய்து பார்தத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது உண்மையில் உடலில் வேலை செய்வதாகவும் மேக்னா கூறுகிறார்.
எனது ஜப்பான் பயண நாட்களில் இருந்து நான் எடுத்த ஐடியா: அவர்களின் 'கரேலு நுஸ்கா' என் உடலில் வேலை செய்வதைக் கண்டேன். பக்கவிளைவுகள் இல்லை, மிகவும் குறைந்த முயற்சி தான்.
கம்தார் கூறுகையில், ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம், இஞ்சித் துண்டுகள் மற்றும் எலுமிச்சைத் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் கஷாயத்தை உட்கொள்வதன் மூலம் வீக்கம் மற்றும் அதிக எடையைக் கூட போக்கலாம் ”என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.
பண்டிகை கால உணவு கொழுப்பை இழக்க. இந்த இரண்டு பொருட்கள் உதவும். இது உங்கள் உடலில் உள்ள பிடிவாதமான கொழுப்பை குறைக்க உதவும்”
கஷாயம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
எலுமிச்சை -1-2
இஞ்சி- சிறியது
1.5லி – தண்ணீர்
செய்முறை
இஞ்சி மற்றும் எலுமிச்சையை (விதை நீக்கப்பட்டது) துண்டுகளாக நறுக்கவும். சாறுகள் பிரித்தெடுக்கப்படும் வரை அவற்றை தண்ணீரில் கொதிக்க விடவும்.
முடிந்ததும், தீயை அணைத்து, கலவையை குளிர வைக்கவும்.
இப்போது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி சேமிக்கவும்.
வேகவைத்த இஞ்சி மற்றும் எலுமிச்சை துண்டுகளை டிடாக்ஸ் கலவையில் மீண்டும் சேர்க்கவும், இதனால் அவை ஊறிக்கொண்டே இருக்கும்.
கஷாயத்தை ஒரு பாட்டிலில் நிரப்பி தினசரி குடிக்கவும். சில நாட்களில் நல்ல பலனைக் காண்பீர்கள். ஆனால் அதேநேரம் நீங்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பலன்கள்
இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதாகவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதாகவும் கூறப்படுகிறது.
பசி உணர்வு ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
குடல்களை சுத்தப்படுத்தவதன் மூலம், எடை இழப்புக்கு உதவுகிறது.
எவ்வாறாயினும், மேலும் எடை இழப்பு இலக்குகளை அடைய, சீரான உணவுடன் தினசரி ஒரு மணிநேர நடைப்பயிற்சி உட்பட வழக்கமான உடல் செயல்பாடு அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“