Chef shares simple hacks for a stress free kitchen
சமையலறையில் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த ‘கெட்ட கிச்சன் நாட்களில்’ ஒன்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், செஃப் சஞ்சீவ் கபூரின் சில கிச்சன் ஹேக்குகள் இங்கே உள்ளன, அது நிச்சயமாக சமையலை ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.
Advertisment
இஞ்சி பூண்டு பேஸ்டின் ஆயுளை அதிகரிப்பது எப்படி
பெரும்பாலான இந்திய சமையலறைகளில் இஞ்சி பூண்டு விழுது பிரதானமாக உள்ளது. உங்கள் பிரிட்ஜில் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை வைத்தால், செஃப் பரிந்துரைக்கும் விரைவான உதவிக்குறிப்பு:
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் ஆயுளை அதிகரிக்க, அரைத்தவுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
பச்சை காய்கறிகளின் நிறத்தை எவ்வாறு தக்கவைப்பது
கபூரின் கூற்றுப்படி, பச்சைக் காய்கறிகளை சமைக்கும் போது மூடி வைக்கக் கூடாது. பாத்திரத்தை மூடுவது அவற்றின் பிரகாசமான நிறத்தை வெளிர் பச்சை நிறமாக மாற்றுகிறது.
கிரிஸ்பி பூரி வேண்டுமா?
முழு கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவாவை சேர்த்தால் கிரிஸ்பி பூரி நிமிடத்தில் கிடைக்கும்.
தேங்காயை புதியதாக வைத்திருப்பது எப்படி
தேங்காய்களை முன்கூட்டியே துருவி, அவற்றை பிரிசரில் உறைய வைக்கலாம். சமைப்பதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் எடுத்து, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.
காளான்கள் சொதசொதப்பாக மாறாமல் தடுப்பது எப்படி
காளான்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும், எனவே அவற்றைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. டிஷ் சொதசொதப்பாக மாறாமல் இருக்க, ஈரமான துணியால் சுத்தம் செய்யவும்.
சர்க்கரையின் ஆயுளை எவ்வாறு அதிகரிப்பது
சர்க்கரையில் 4-5 கிராம்புகளை வைக்கவும்.
என்ன இந்த ஹேக்ஸ் சுவாரஸ்யமாக இருக்கிறதா? இந்த கிச்சன் ஹேக்குகள், உங்கள் தினசரி சமையலை நிச்சயமாக ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“