/tamil-ie/media/media_files/uploads/2022/01/kitchen-knife_getty1200.jpg)
tips to maintain your kitchen knife set in tamil
ஒரு நல்ல கத்தி என்பது சமையலறையின் சொத்து. பாரிங், சாப்பிங், ஸ்லைசிங் மற்றும் போனிங் போன்ற பலவிதமான கத்திகளை வைத்திருப்பது’ ஒரு நல்ல வீட்டு சமையல்காரராக வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக்கும்.
இருப்பினும், ஒரு நல்ல கத்திகளில் முதலீடு செய்வது போலவே, அவற்றை சரியாக பராமரிப்பதும் முக்கியமானது. சரியான கத்தி பராமரிப்பு அதன் ஆயுளை அதிகரிக்கும். கூடுதலாக, மந்தமான கத்தி ஆபத்தானது மற்றும் கூர்மையானதை விட காயத்தை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் கத்திகளை நல்ல நிலையில் வைத்திருக்கவும், அவற்றின் ஆயுளை அதிகரிக்கவும் சில எளிய குறிப்புகள் இதோ!
கத்தியைத் துடைத்து பாதுகாப்பாக வையுங்கள்!
இது முக்கியமானது, ஏனென்றால் பயன்படுத்தப்பட்ட கத்தியை அப்படியே விட்டுவிடுவது காய்கறி, பழங்கள், மீன் மற்றும் இறைச்சியின் எச்சங்கள் அதன் மீது சேகரிக்க அனுமதிக்கும். இது உங்கள் உடலுக்குள் வரக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பாத்திரங்கள்’ பல்வேறு வகையான பொருட்களுக்கு இடையில் ஈ.கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை பரப்பலாம், இது உணவு விஷத்திற்கு வழிவகுக்கும்.
கத்திகளை நன்கு கழுவி உலர வைக்கவும்!
பாத்திரங்களை சுத்தம் செய்ய டிஸ்வாஷர்ஸ் அதிக அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. இது உங்கள் கத்திக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அதன் விளிம்பையும், கூர்மையையும் குறைக்கும். எப்பொழுதும் உங்கள் கத்திகளை மென்மையான டிஷ் சோப்புடன் கைகளைக் கொண்டு கழுவவும். ஸ்க்ரப் பேடைப் பயன்படுத்த வேண்டாம், பிளேட்டைக் கழுவும்போது கவனமாக இருங்கள்.
சிட்ரஸ் சாறுகள் அல்லது ப்ளீச் கொண்ட சோப்புகளை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அவை துருவை ஏற்படுத்தும். கழுவிய பிறகு, கத்தியை துண்டுகளை கொண்டு உடனடியாக துடைக்கவும். நீங்கள் அதை வைப்பதற்கு முன், தண்ணீர் மற்றும் ஈரப்பதம் அனைத்தும், கூர்மையான வெட்டு விளிம்பிலிருந்து காய்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சின்க்கில் கத்திகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும்!
கத்தியின் விளிம்புகள் கூர்மையாக இருக்கும் மற்றும் ஒரு மேற்பரப்பில் தொடர்ந்து தேய்ப்பதால் அது மழுங்கிவிடும். உங்கள் கத்தியைக் கழுவுவதற்கு முன் சமையலறை சின்க்கில் அல்லது பாத்திரம் அலமாரியில் வைத்தால், கத்திகள் மற்ற பாத்திரங்களில் தொடர்ந்து உராய்ந்து கொண்டே இருக்கும். இதனால், அவை அவற்றின் கூர்மை மற்றும் பயன்பாட்டை இழக்க நேரிடும் என்பதால், இது கத்திக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
சாப்பிங் போர்டை பயன்படுத்துங்கள்!
சாப்பிங் போர்டு உங்கள் கத்தியின் சிறந்த நண்பர். இவை உங்கள் வெட்டும் செயல்முறையை ஒழுங்கமைப்பது மட்டுமல்லாமல், உங்கள் கத்தியின் கூர்மையான பிளேடுகளுக்கு, ஒரு குஷன் வழங்குகிறது. குறிப்பாக ஒரு மரத்தாலான சாப்பிங் போர்டு தேர்வு செய்யவும், அவற்றை எளிதாக சுத்தம் செய்யலாம், அத்துடன் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பரிமாற்றத்தைத் தவிர்க்கவும் முடியும்.
அவ்வப்போது கத்தியை கூர்மையாக்குங்கள்:
உங்கள் சமையல் திறன்களைப் போலவே, உங்கள் சிறந்த நண்பரான கத்தியை அவ்வப்போது மேம்படுத்தவும். உங்கள் கத்தியை வருடத்திற்கு ஒரு முறை வீட்ஸ்டோன் மூலம் கூர்மைப்படுத்துங்கள் அல்லது தொழில்முறை உதவியை நாடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us