ரஜினியை 15 முறை சந்தித்து இருக்கிறேன்; அவர் டயட் இப்படித்தான்: வெங்கடேஷ் பட்

செஃப் வெங்கடேஷ் பட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உணவு முறை அவரது லைஃப்ஸ்டைல் பற்றி கூறியுள்ளார்.

செஃப் வெங்கடேஷ் பட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உணவு முறை அவரது லைஃப்ஸ்டைல் பற்றி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Ambania

செஃப் வெங்கடேஷ் பட் மிகவும் பிரபலமானவர். இவர் பெரிய உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலருக்கும் உணவு தயாரித்து கொடுத்துள்ளார். ரஜினி,கமல் உள்ளிட்ட பலருக்கும் இவர் உணவு தயாரித்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளா. 

Advertisment

அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அதில் திரைப்பிரபலங்களின் உணவு பழக்கம், ஃபிட்னஸ் பற்றி பகிர்ந்திருந்தார். அவர் பேசுகையில், "திரைப்பிரபலங்கள் பலரும் ஃபிட்னஸ் ஃபாலோ செய்கின்றனர்.

உணவு பழக்கத்தில் கவனமாக இருக்கின்றனர். மைதா, பால் போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். வெள்ளையாக இருக்கின்ற பொருட்கள் சாப்பிட்டு செரிமானம் ஆக நேரம் எடுக்கும்.  ரஜினி இதுபோன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்வது இல்லை என்று கூறியுள்ளார். 
 
சர்க்கரை, மைதா, உப்பு, பால் போன்றவை வெள்ளை பொருட்கள். ரஜினிகாந்த்தை 15 முறை சந்தித்து இருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவருக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும். நான் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ரஜினி அங்கு வந்திருக்கிறார். அவர் சிக்கன், அசைவம் விரும்பி சாப்பிடுவார். லிமிடெட் ஆக சாப்பிடுவார்.  

Advertisment
Advertisements

50 வயதில் கூட லிமிடெட் ஆக தான் சாப்பிட்டார். கமலும் அப்படி தான் அதிக கொழுப்பு இருப்பதை உண்ணமாட்டார். ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனிதராக எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்" என்று கூறியிருந்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: