செஃப் வெங்கடேஷ் பட் செய்த சிம்பிள் மற்றும் சுவையான வெண்டைக்காய் சாதம் ரெசிபி குறித்து இங்கு பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் - 2 ஸ்பூன் வெண்டைக்காய் - அரை கிலோ கடலைப் பருப்பு -1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு பூண்டு - 20 பல் பூண்டு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் - 10 தேங்காய் நல்லெண்ணை
கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். நல்ல சுண்ட வதக்கிய பின் அதன் மேல் உப்பு தூவி தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் பொடி செய்ய கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பூண்டு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். காய்ந்த மங்களூர் மிளகாய் 10 போடவும். இப்போது அரை மூடி தேங்காய் சேர்த்து வதக்கவும். இது ஆறய பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இதன் பின் சாதத்தை தாளிக்க கடாயில் நல்லெண்யை ஊற்றி கடுகு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு, கீறிய ப.மி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து வறுத்து வைத்த வெண்டைக்காய், அரைத்த மசாலா 2 டேபிள் ஸ்பூன் போட்டு , வேக வைத்த சாதத்தை போடவும். அடுத்து உப்பு போட்டு, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சிம்பிளான சுவை அள்ளும் வெண்டைக்காய் சாதம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“