மழை நேரத்தில் சட்டென சூடாக காரமாக ஒரு ஸ்நாக்ஸ் செஃப் வெங்கடேஷ் பட் கைவரிசையில் அதுவும் மிகவும் சுலபமாக ஆந்திரா ஸ்டைலில் அரிசி போண்டா அதற்கு இணையாக பூண்டு சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்த அரிசி
வேகவைத்த உருளைக்கிழங்கு
மிளகாய்த்தூள்
சீரகத்தூள்
ஆப்பச்சோடா
உப்பு
பச்சை மிளகாய்
இஞ்சி
கருவேப்பிலை
சமையல் எண்ணெய்
செய்முறை
சாப்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடிய அரிசியை சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மாவு மாதிரி அரைத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்ஸியில் தேவையான அளவு வேகவைத்த உருளைக்கிழங்கை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை தனித்தனியாக அரைத்து எடுத்தவுடன் இரண்டையும் பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து விட வேண்டும். இதில் தேவையான அளவு சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலையை நறுக்கி அதில் சேர்த்து கலந்து விட வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு ஆப்பcசோடா சேர்த்து போண்டா பதம் வருவதற்காக சிறிது தண்ணீரும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை போண்டா மாதிரி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் அரிசி போண்டா ரெடியாகிவிடும். நமக்கு தேவையான வடிவிலும் பொறித்து எடுத்துக் கொள்ளலாம்.
சட்னி செய்முறை
பூண்டு, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், சீரகத்தூள்,உப்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சட்னியை தாளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து சீரகம் பொரிந்த உடன் சட்னிக்காக அரைத்து வைத்ததை எண்ணையில் சேர்த்து வேக வைக்க வேண்டும். தீய விடாமல் பச்சை வாசம் நீங்கும் அளவிற்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு வதக்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடம் நன்றாக வேகவைத்து பச்சை வாசம் நீங்கியவுடன் இறக்கிவிடலாம்.
போண்டா நல்ல சிவந்த நிறமாக வெந்தவுடன் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் மிகவும் எளிதாக குறுகிய நேரத்திலேயே இதனை செய்துவிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“