சென்னை 28 விஜயலட்சுமியின் லாக்டவுன் & சம்மர் டிப்ஸ்!

summer tips: கற்றாழை, முல்தாணி மெட்டி, காபித்தூள் கலந்த ஃபேஸ்பேக் முகத்தை பொலிவு பெற செய்யும்

Bigg Boss Vijayalakshmi Skincare Secrets Beauty Secrets Tamil News

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகைகள் பலரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து ஹோம் டூர், கப்போர்ட் டூர், கிட்சன் டூர், ஃபிர்ட்ஜ் டூர் , பியூட்டி டிப்ஸ் என வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். ஆல்யா மானசா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, உமா ரியாஸ்கான், பூவே பூச்சூடவா ரேஷ்மா என பலரும் இதில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் பதிவிடும் வீடியோக்களும் ட்ரண்டிங்கில் உள்ளது. ரசிகர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கி வருவதோடு என்டெர்டெயின் பண்ணி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை 28 விஜயலட்சுமி தனது vlog ல் சம்மர் டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். கற்றாழை ஜெல்லை மோருடன் கலந்து குடிப்பதன் பலன், கற்றாழை முல்தாணி மெட்டி காபித்தூள் சேர்த்த ஃபேஸ்பேக், அதிகமான எனர்ஜிக்கு லெமன் ஜூஸ், வீட்டில் போர் அடிக்காமல் இருக்க விளையாடும் WINZO app கேம்கள் என தனது லைப் ஸ்டைல் பற்றி கூறுகிறார். லெமன், வெள்ளரிக்காய், புதினா, ஆரஞ்சை தண்ணீரில் போட்டு குடித்தால் கிடைக்கும் மினரல்ஸ் என சம்மர் டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். அனைவரும் குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் உள்ளதோடு ரசிகர்கள் பலரும் லைக் செய்துள்ளனர். ‘பசங்களும் இருக்கோம் அவங்களுக்கும் டிப்ஸ் சொல்லுங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai 28 biggboss vijayalakshmi actress vlog summer tips

Next Story
வெதுவெதுப்பான பால், பச்சை மிளகாய்… வீட்டில் கெட்டித் தயிர் வேகமாக தயார் செய்வது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com