உணவுப்பிரியர்களா நீங்க….சென்னையின் இந்த கஃபேக்களை மிஸ் பண்ணிறாதீங்க

சென்னையில்   சுற்றிப்பார்க்கவுள்ள இடங்கள் நிறைய உண்டு. அதில் உங்களுக்காக சிலவற்றை தருகிறோம்.

By: July 10, 2019, 2:43:42 PM

தமிழ்நாட்டின் தலைநகருக்கு   நீங்கள் வருவீர்களானால், எங்கு செல்வது என்பது பற்றி  கவலைப்பட தேவையில்லை. சென்னையில்   சுற்றிப்பார்க்கவுள்ள இடங்கள் நிறைய உண்டு. அதில் உங்களுக்காக சிலவற்றை தருகிறோம்.

1. Writer’s Café  

சென்னையில் உள்ள Writer’s Café அமைதியான சூழ்நிலையையும், சிறந்த காபியுடன் உங்கள் பொழுதைக்கழிக்கலாம்.   ஐரோப்பிய   பாணியிலான   உணவு வகைகளும் இங்கு கிடைக்கும்.   இந்த இடத்தில் இலவச வைஃபை   கிடைக்கிறது. மின்னஞ்சல், மற்றும் படங்கள்   பார்க்கலாம்.

இடம்- கோபாலபுரம்
  இரண்டு பேருக்கு –   450
ஜோமாடோ மதிப்பீடு –   4.3/5

2. Sandy’s Chocolate Laboratory 

2. Sandy’s Chocolate Laboratory   என்பது   ஓர் அமைதியான இடம்.   சுவையான இனிப்புகள் மற்றும் மிட்டாய்களுக்கு, இந்த கபே நிபுணத்துவம் பெற்றது. உணவு பெரும்பாலும் இத்தாலிய மற்றும்   ஐரோப்பிய உணவுகள் கிடைக்கும். காபி மிகச்சிறந்த சுவையில் இருக்கும்.

இடம்: நுங்கம்பாக்கம்
இரண்டு பேருக்கு: INR 1,400
ஜோமாடோ மதிப்பீடு: 4.2 / 5

3. Waf O’ Bel

Waf O’ Bel   என்பது ஒரு   இனிப்புகள் மிட்டாய் வகைகள் விற்பனை நிறுவனம், ஐஸ்கிரீம் மற்றும் அருமையான காபிக்கு இது பிரபலம். இந்த இடம் வழக்கமான விருந்தினர்களிடையே பிரபலமான ஓர் இடம். இங்கு ஆசிய வகையிலான உணவுகள் கிடைக்கும்.

  இடம்: சேத்துப்பட்டு
இரண்டு பேருக்கு: ரூ .800
ஜோமாடோ மதிப்பீடு: 4.5 / 5

4. Amelie’s

  Amelie’s ல், ஆசிய மற்றும் இத்தாலிய   உணவு வகையிலான   ஓர் கஃபே; இங்கு  நாள் முழுதும் இங்கு சிற்றுண்டிகள் கிடைக்கும். உணவு மற்றும் குளிர்பானங்களை சுவைக்க மிகவும் அருமையான இடம். 
 
இடம்:   ஆழ்வார்பேட்டை

இரண்டு பேருக்கு:   INR 900

ஜோமாடோ மதிப்பீடு: 4.4 / 5

5. Basil With A Twist

  Basil With A Twist ஒரு சிறந்த கஃபே,   ஆசிய, இத்தாலியன், ஐரோப்பிய மற்றும் மத்திய தரைக்கடல் உணவு வகைகளுக்கு பிரபலம். இந்த கஃபே யில் இலவச வைஃபை   உள்ளது. விளையாட்டு போட்டிகள் இங்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இடம்:தி.நகர்

இரண்டு பேருக்கு: ரூ .1,500

ஜோமாடோ மதிப்பீடு: 4.3 / 5

  6. Coal Barbeques

6. Coal Barbeques என்பது   ஒரு பிரபலமான சாதாரண உணவு விடுதியாகும்,   சுவையான   barbeque உணவு வகைகளுக்கு புகழ் பெற்றது.   மத்திய தரைக்கடல், அரபு, ஆசிய மற்றும் வட இந்திய உணவு வகைகளால்   இந்த கஃபே நிரம்பியுள்ளது.  

இடம்: தி.நகர்

இரண்டுக்கான செலவு: INR 1,400

இரண்டு பேருக்கு: 4.6 / 5    

7. Cleo’s Grill & Café

Cleo’s Grill & Café   அமைதியாக நல்ல சாப்பாடு உண்பதற்கு சிறந்த இடம்.   இந்திய மற்றும்   சீன உணவுகள் இங்கு கிடைக்கும் இடம்.

  இடம்: அடையார்

இரண்டுக்கான செலவு- INR 1,200
ஜோமாடோ மதிப்பீடு: 4.4 / 5

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Chennai best cafes and eateries

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X