The Tamil Nadu government on Wednesday launched a mobile app, ‘Chennai Bus’, to make travelling hassle-free for commuters in Chennai. / சென்னை மாநகரில் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம், வந்து சேரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மொபைல் ஆப் தமிழக அரசால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு, பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) எம்டிசி பேருந்துகளின் இருப்பிடத்தை நிகழ்நேர அடிப்படையில் வழங்கும் 'சென்னை பஸ்- மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
3,233 எம்டிசி பேருந்துகளின் இயக்கத்தை, லொக்கேஷன் டிராக்கிங் டிவைசஸ் மூலம் கண்காணிக்கவும் இந்த ஆப் மக்களுக்கு உதவும். 602 வழித்தடங்கள் வழியாக இயக்கப்படும் எம்டிசி பேருந்துகள், 6,026 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன.
தினமும் சுமார் 25 லட்சம் பேர் எம்டிசி பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். கொரோனா தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்பு, தினமும் சுமார் 35 லட்சம் பேர் எம்டிசி பேருந்துகள் மூலம் பயணம் செய்தனர்.
மே 4 புதன்கிழமையன்று ’சென்னை பஸ்’ செயலியை அறிமுகப்படுத்திய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “இதைப் பயன்படுத்தி, பயணிகள் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள அனைத்து எம்டிசி பேருந்துகளின் நேரலை இருப்பிடம், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் மற்றும் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும்" என்று கூறினார்.
இந்த செயலியானது மக்கள்’ ரயில் நிலையங்கள் மற்றும் நகரத்தில் உள்ள பிற முக்கிய இடங்களை எந்த தொந்தரவும் இல்லாமல் அடைய உதவுகிறது.
ஒரு யூசர் 'பஸ் ரூட்' விருப்பத்தை கிளிக் செய்து, வழித்தட எண்ணை உள்ளிடும்போது, அனைத்து இயக்கப்படும் பேருந்துகளும் திரையில் காட்டப்படும்.
இரண்டு நிறுத்தங்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளின் இருப்பிடத்தைப் பார்க்க, யூசர் ’ரூட் ஆப்ஷனை’ கிளிக் செய்யலாம், இதன் மூலம், அவை வரும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பயணிகள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு’ பஸ் ஆப் மூலம் பேரிடர் சமிக்ஞைகளை அனுப்பலாம். பயணிகள் எளிதாக அணுகுவதற்கு வசதியாக, SOS பட்டன்’ ஆப் திரையின் மேல் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் ஹோம் ஸ்கிரீன்’ 1 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் பெயர்களையும் பரிந்துரைக்கிறது.
'டிரிப் பிளானர்' அம்சத்தைப் பயன்படுத்தி, யூசர்ஸ் ஒரு பேருந்தின் வழித்தட எண்களை அறிந்து கொள்ளலாம். ‘Contact Us’ ஆப்ஷனில்’ புகார் எண்கள் (Whatsapp/Telegram) மற்றும் 31 பஸ் டிப்போ கிளை மேலாளர்களின் தொடர்புகள் உள்ளன. Favorite ஆப்ஷனை பயன்படுத்தி பயணிகள் தங்களுக்குப் பிடித்த வழிகள் மற்றும் இடங்களைச் சேமிக்கலாம்.
இந்த ஆப் மக்களிடமிருந்து கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறது. தற்போது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த செயலி கிடைக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழி விருப்பங்களைக் கொண்டுள்ளது.
‘சென்னை பஸ்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.