/tamil-ie/media/media_files/uploads/2023/04/trains-1.jpg)
Chennai Egmore to Tuticorin train
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண். 06001) வெள்ளிக்கிழமை (நவ.10) மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us