நமது நகரங்கள் எப்படி வளர்கிறது என்பதை கவனிக்கிறீர்களா ?
நீடித்த தன்மை கொண்ட கட்டிடங்கள் கட்ட நாம் என்ன செய்ய வேண்டும் ? முதன்முதலாக இயற்கையான நிலப் பகுதியின் தன்மை கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
நில அமைப்புக்கு தக்கவாறு எப்படி கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்ள எந்த பருவ மண்டலத்தில் கட்டிடங்கள் கட்டப் போகிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும் .
உதாரணமாக Humanscapes அதிக வெப்பமும் , ஈரப்பதமும் கொண்ட வெப்ப - ஈரப்பத மண்டலத்தில் கட்டப்பட்டதாகும் . இந்த இரண்டும் சேர்ந்திருந்தால் அங்கு வாழ்பவர்களுக்கு பிற பகுதியில் வசிப்பர்களைக் காட்டிலும் வியர்வை அதிகமாக வெளியேறும் .
இது ஃபேன் அல்லது ஃபிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை நேரடியாகவும் , மின்சாரத்தை மறைமுகமாகவும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளும் .
கட்டிட கலைஞரும் , நகர திட்டமிடலா ளருமான சுஹாசினி புதுச்சேரியில் உள்ள ஆரோவில் நகர வாழ்விட திட்டத்தை மேற்கொள்கிறார் .
இதுகுறித்து DW Tamil செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், ’ நாம இளைய தலைமுறையினர் குடியிருக்கக் கூடிய முற்றிலும் மாறுபட்ட திட்டத்தோட , வித்தியாசமான தொழில்நுட்பத்தோட கட்டிடத்தை கட்டுனா அது உண்மையிலே இளைய தலைமுறையினரை ஈர்க்கும் .
இந்தியாவில் நீடித்த நிலைத்தன்மை கொண்ட கட்டிடத்தை எப்படி கட்டுறதுனு அடிப்படையில உருவானதுதான் Humanscapes.
இந்த மண்ணுல விழுற ஒரு சொட்டு நீர் எங்க போகுது ? எங்க முடியுது ? புவியியல் ரீதியா காலம்காலமா நிலத்தை உருவாக்குறது நீர்தான் . அதே தொந்தரவு செஞ்சா என்ன ஆகும் ? அதுதான் பருவமழை காலங்கள்ல சென்னையில நடக்குது .
ஒருசில வீடுகளுக்குள் வெள்ள போகுற அதே சமயத்துல இன்னொரு சில வீடுகள்ல குடிக்க தண்ணீர் இருக்காது . இந்தமாதிரி நகரத்துல வெள்ளப்பெருக்கு தடுக்கணும்னா நீர் மேலாண்மை தான் ஒரே வழி .
சூரிய ஒளி எந்தெந்த நேரங்கள்ல கட்டிடத்தின் எந்தெந்த பகுதியில விழுகுதுனு பார்க்கிறோம் . அதுக்கு ஏத்தமாதிரி வீட்டுல சூரிய ஒளி படும் பாகங்கள்ல என்னென்ன விஷயங்கள் வைக்கலாம்னு சிந்திக்கிறோம் .
சூரிய ஒளி , காற்று , கட்டிடத்தின் கோணம் - இந்த மூன்றையும் அடிப்படையா வச்சு கட்டிடங்களை எப்படி வடிவமைக்கலாம் முடிவு செய்யும் . அப்போ அந்த வீடு வசதியா இருக்கும் . அதுதான் விஷயம் … என்கிறார் சுஹாசினி
இந்த இரண்டு கருத்தாங்களையும் நகரங்களை உருவாக்கும்போது செயல்படுத்தினால் நாம் நீடித்த தன்மையின் முதல் படியை தொடுகிறோம் என்று கூறலாம் . கட்டிடங்களை கட்டும் போது கட்டிடத் தொழில் தான் உலகின் ஆற்றலுக்கான முக்கிய பங்காற்றாகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும் .
சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைப்பதைத் தாண்டி கட்டிடத் தொழில் மூலம் கழிவுகளாக குப்பைமேட்டுக்கு செல்லும் மூன்று பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன . கட்டிடக் கழிவுகள் பொடியாக்கப்பட்டு அவை மண் சுவர்களாக பயன்படுத்தப்படுகிறது .
வெப்பத்தை குறைப்பதற்காக நிராகரிக்கப்பட்ட மூன்றாம் தர செராமிக் டைல்ஸ்கள் மேல் தளத்திற்காகவும் , கழிவுகளாக வெளியேறிய சுண்ணாம்புத் தூள்கள் சுவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன .
இதுகுறித்து Humanscapes கட்டடக் கலைஞர் ஆர். உலகநாதன் DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே..
VIDEO
“ தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“