Advertisment

உலகிலேயே செலவு குறைந்த டாப் 10 நகரங்கள் பட்டியலில் சென்னை! அப்படியா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai includes in top list of World's Cheapest cities - செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை! அப்படியா?

Chennai includes in top list of World's Cheapest cities - செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை! அப்படியா?

உலகிலேயே மிகவும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

பிரிட்டனைச் சேர்ந்த 'எகான மிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்' என்ற நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் நிலவும் விலைவாசியை மையமாக கொண்டு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகரங்கள் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளன. ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜூரிச் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகருடன் 5-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சியோல் நகருக்கு 6-வது இடம். டென்மார்க் தலைநகரம் கோபன்ஹெகன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு 7-வது இடம். இஸ்ரேலின் டெல்அவிவ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் 10-வது இடத்தைப் பிடித்துள்ளன.

செலவு குறைந்த நகரம் சென்னை

செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில், உலகளவில் சென்னை நகரம் அர்ஜென்டினா தலைநகர் பியூன்ஸ் அயர்சுடன் சேர்ந்து 8-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது. முதலிடத்தை வெனிசூலாவின் தலைநகர் கரகாஸ் பிடித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸ் உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கன்ட், கஜகஸ்தானின் அல்மாதி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பெங்களூரு நகருக்கு 5-வது இடம். கராச்சிக்கு 6-வது இடம். நைஜீரிவாயின் லாகோஸ் நருக்கு 7-வது இடம். டெல்லிக்கு 10-வது இடம்.

செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை, பெங்களூரு, டெல்லி என இந்தியாவின் 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உணவு செலவு, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட 150 காரணிகளைக் கொண்டு 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இருப்பினும், பெங்களூரு, டெல்லி நகரங்கள் எப்படி உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்தன என்பது தான் நமது மூளையை குடையும் கேள்வியாக உள்ளது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment