இந்திய ரயில்வே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களுக்காக சூப்பர் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் டூரின் மூலம் தமிழகத்தில் உள்ள சென்னை,கன்னியாகுமரி, ராமேஸ்வரம்,மதுரை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். இந்த பேக்கேஜ்ஜை புக் செய்தால் ஸ்லீப்பர் க்ளாசில் பயணிக்கலாம்.
மதுரை
'கிழக்கின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படும் மதுரை, தமிழ்நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. சங்க காலத்தில் மிக முக்கிய நகரமாகவும் இது திகழ்ந்துள்ளது. முதல் காவியமான சிலப்பதிகாரம் உருவாக்கப்பட்டதும் இந் நகரத்தில்தான். மதுரை, மல்லிகை பூக்களுக்கு பெயர் போன நகரம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இங்கு புகழ்பெற்றது. இந் நகரம் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகளின் இருப்பிடமாகவும் விளங்குகின்றது.
கன்னியாகுமரி
வங்காள விரிகுடா, அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்கள் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. இந்துக்களின் யாத்ரீக மையமாக விளங்குவதைவிட சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய அழகிய காட்சிகளுக்கும் கன்னியாகுமாரி பிரபலமானது.
கி.பி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதியில் வர்த்தக நோக்கத்தில் கடல் பாதை வழியாக நுழைந்தனர். பின், கிறித்தவ மதமும் கி.பி 52 நுாற்றாண்டில் கன்னியாகுமரி ஊடாக இந்தியாவில் பரவியது.
திருச்செந்தூர்
முருகக்கடவுள் சூரபதமனை, வதம் செய்த இடம் திருச்சேந்தூர். எனவே இதை நினைவுகூர்ந்து முருகனுக்காக திருச்செந்தூரில் ஒரு கோயில் கட்டப்பட்டது.
ராமேஸ்வரம்
இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்று ராமேஸ்வரம், இது தமிழகத்தின் தெற்கில் அமைந்துள்ளது. இங்குள்ள ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரபலமானது. ராமநாதசுவாமி கோயில்,ராமாயண காவியத்தின் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையுடன் இது மிகவும் நெருக்கமான தொடர்புடையது, சைவர்களும் வைணவர்களும் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இந்துக்களின் வாழ்நாளில் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இனி சென்னையில் இருந்து மதுரை,திருச்செந்துார், இராமேஸ்வரம் செல்வது மிக எளிது. சென்னையில் இருந்து மதுரை,திருச்செந்துார், இராமேஸ்வரம் செல்ல ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்கிழமை அன்று ரயில்கள் இயக்கப்படுகிறது. காலை 05:15 மணிக்கு இந்த ட்ரெயின் சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தங்குமிடம்
கன்னியாகுமாரி செல்பவர்களுக்கு அங்குள்ள உள்ள ஹோட்டல் சிங்கார் –( Hotel Singaar/Temple Citi or similar) ஆகிய விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.
இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு அங்குள்ள ஹோட்டல் டெய்விக் அல்லது ஹோட்டல் விநாயகாவில் (Hotel Daiwik/Hotel Vinayaga or similar தங்க ஏற்பாடு செய்யப்படும்.
பேக்கேஜ் கட்டணம்
இருவருக்கான கட்டணமாக ரூ.11485 வசூலிக்கப்படுகிறது. மூவர் செல்ல விரும்பினால் அவர்களுக்கான கட்டணமாக ரூ. 8885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கான கட்டணம் ரூ. 4960 (படுக்கை வசதியுடன்) ஆகும். படுக்கை வசதி வேண்டாம் என்றால் ரூ. 3395 கட்டணமாக வசூலிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.