/indian-express-tamil/media/media_files/2025/08/23/marina-moon-2025-08-23-08-40-13.jpg)
நிலவை, நட்சத்திரக்களை, கோள்களை, மக்கள் கோளரங்குகளில் மட்டுமல்ல மெரினா வந்தாலும் பார்க்கலாம்.
மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கடலை ரசித்து, கடலலைகளில் கால் நனைத்து, காற்று வாங்கியதோடு மட்டுமல்லாமல் நிலவை நெருக்கமாகப் பார்த்த மகிழ்ச்சியில் செல்கிறார்கள். நிலவை, நட்சத்திரக்களை, கோள்களை, மக்கள் கோளரங்குகளில் மட்டுமல்ல மெரினா வந்தாலும் பார்க்கலாம்.
சென்னை மக்களுக்கு மெரினா கடற்கரைதான் ஒரு பெரிய இளைப்பாறுதல், மாலை நேரங்களில் கடல் அலைகளைப் பார்த்தபடி, காற்று வாங்கவும் காலாற நடப்பதற்கும் மனதுக்கு இதமான இடம் என்றால் அது மெரினாதான். இப்படி மனதுக்கு இதமளிக்கும் மெரினா கடற்கரையில் உங்களுக்கு நிலவை மிகவும் நெருக்கமாகக் காட்டினால் எப்படி இருக்கும்? ஆம், ஒரு தொழில்முறைப் பொறியாளர் தினமும் தனது காரில் ஒரு பெரிய தொலைநோக்கி (டெலஸ்ட்கோப்) உடன் மெரினா கடற்கரைக்கு வந்து, அதன் வழியாக மக்களுக்கு நிலாவை மிகவும் நெருக்கமாகக் காட்டுகிறார். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வானத்தில், நட்சத்திரங்களையும் கிரகங்களையும் காட்டுகிறார்.
மெரினாவுக்கு வரும் மக்களைத் தனது தொலைநோக்கி மூலம் கவர்பவர் பொறியாளர் சரண். இவர் ஒரு தொழில்முறை கட்டடக்கலைப் பொறியாளர். இவர் தனது காரில் ஒரு பெரிய டெலஸ்கோப் உடன் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மெரினா கடற்கரைக்கு வந்து, அங்கே வரும் மக்களுக்கு தொலைநோக்கி மூலம் நிலவையும் நட்சத்திரங்களையும் கோள்களையும் காட்டுகிறார். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பவர்களிடம் 50 ரூபாய் பெறுகிறார். மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கடலை ரசித்து, கடலலைகளில் கால் நனைத்து, காற்று வாங்கியதோடு மட்டுமல்லாமல் நிலவை நெருக்கமாகப் பார்த்த மகிழ்ச்சியில் செல்கிறார்கள்.
பூமியை ஈர்க்கும் நிலா
நிலவு என்பது பூமியின் இயற்கை துணைக்கோள் (Natural Satellite) ஆகும். இது சூரியக் குடும்பத்தில் 5வது பெரிய நிலா; பூமியுடன் ஒப்பிடும்போது சுமார் 1/4 அளவு மட்டுமே கொண்டது. பூமியிலிருந்து நிலவின் சராசரி தூரம் 3,84,400 கிலோமீட்டர் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள்.
நிலவின் இயக்க காலம் (Orbit period) சுமார் 27.3 நாட்கள். இதே நேரமே நிலவின் சுழற்சி காலமும் ஆகும். அதனால் நாமெல்லாம் பூமியில் இருந்து நிலவின் ஒரே பக்கம் மட்டுமே எப்போதும் பார்க்கிறோம். நிலவின் மேற்பரப்பு தூசி, கற்கள், எரிமலைக் குழிகள் (craters), சமவெளிகள் ஆகியவற்றால் ஆனது.
நிலவும் பூமியும் உள்ள தொடர்பு பற்றி பார்த்தால், அது ஒரு இடைவெளி ஈர்ப்பு (Gravitational Pull) என்று கூறலாம். நிலவு பூமியை ஈர்க்கிறது, பூமியும் நிலவைக் கவர்கிறது. உண்மையில் ஒன்றையொன்று கவர்கின்றன.
இதனால்தான் கடலில் அலைகள் உருவாகின்றன. கடலில் ஏற்படும் ஏற்றம் - இறக்கம் நிலவின் ஈர்ப்பால் தான் நிகழ்கின்றன என்கிறார்கள்.
பூமி, நிலவு, சூரியன் ஆகியவற்றின் தொடர்பான நிலைகளின்படி நிலவு பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகிய கட்டங்களில் தோன்றுகிறது. இது சுமார் 29.5 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது.
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் சுழற்சி அச்சு (Axis of Rotation), சூரியனைச் சுற்றும் பாதையின் செங்குத்து கோட்டில் இருந்து சுமார் 23.5° சாய்ந்துள்ளது. இதை அச்சு சாய்வு (Axial Tilt / Obliquity) என்கிறோம். நிலவின் ஈர்ப்பு காரணமாகவே பூமியின் சுழற்சி அச்சு நிலையாக இருக்கிறது. நிலவு இல்லையென்றால், பூமியின் அச்சு அடிக்கடி மாறும்; இதனால் வானிலை கடுமையாக மாறியிருக்கும்.
நிலவின் ஈர்ப்பால் பூமியின் சுழற்சி மெதுவாக குறைந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும், பூமியின் நாள் சுமார் 1.4 மில்லி வினாடி நீளமாகிறது.
பூமியுடன் இத்தனை நெருக்கமாகத் தொடர்புள்ள நிலாவை பொறியாளர் சரண் மெரினாவில் தொலைநோக்கி வழியாக மக்களுக்கு மிக நெருக்கமாகக் காட்டுகிறார். நிலவை, நட்சத்திரக்களை, கோள்களை, மக்கள் கோளரங்குகளில் மட்டுமல்ல மெரினா வந்தாலும் பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.