Advertisment

சென்னையில் எத்தனை ஜில்ஜில் ஏரியா... பொது நீச்சல் குளங்கள் பட்டியல் இதோ!

சனிக்கிழமையன்று, சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது, இது இயல்பை விட 2.4 டிகிரி செல்சியஸ் அதிகம், இது இந்த சீசனில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
public pools in Chennai

Here’s a list of public pools in Chennai

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் வெப்பத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், சென்னையிலும் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில், சென்னையின் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சனிக்கிழமையன்று, சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது, இது இயல்பை விட 2.4 டிகிரி செல்சியஸ் அதிகம், இது இந்த சீசனில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.

Advertisment

இதனிடையே கொளுத்தும் வெயிலில் இருந்து விடுபட மக்கள் விரும்புவதால், நீச்சல் குளங்களுக்கு இப்போது அதிக தேவை உள்ளது. நீங்கள் நகரத்தின் வெப்பத்தைத் தணிக்க விரும்பினால், சென்னையில் உள்ள பொது நீச்சல் குளங்களின் பட்டியல் இதோ.

அண்ணா பல்கலைக்கழக நீச்சல் குளம், கோட்டூர்புரம்

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த குளம் சென்னையில் உள்ள பிரபலமான பொது நீச்சல் குளங்களில் ஒன்றாகும். குளத்தின் ஆழம் நான்கு அடி முதல் 12 அடி வரை உள்ளது. எனவே உங்கள் வசதியின் அளவைப் பொறுத்து நீங்கள் நீந்தலாம்.

மேலும் இங்கு, பயிற்சி பெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் சிறப்பான நீச்சல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. புதன் முதல் திங்கள் வரை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4-8 மணி வரையிலும் நீங்கள் அங்கு செல்லலாம். ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும். அவர்களை 9841631365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மெரினா நீச்சல் குளம்

100 மீட்டர் நீளமுள்ள மெரினா நீச்சல் குளம், தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்ட பின்னர், ஏப்ரல் 6, 2022 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.  திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 5:30 முதல் இரவு 7:30 வரை இங்கு செல்லலாம். இந்த குளம் சென்னை மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.

SDAT ஆக்வாட்டிக் காம்பிளக்ஸ், வேளச்சேரி

வேளச்சேரி சாலையில் உள்ள ஆக்வாட்டிக் காம்பிளக்ஸ், மாநில அரசால் ரூ.11.32 கோடியில் 1995ல் கட்டப்பட்டது. இது ஒரு அவுட்டோர் குளம். இங்கு உடற்பயிற்சி மையம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸிற்கான உட்புற கூடமும் உள்ளது. நீச்சலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த குளம் வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர மெம்பர்ஷிப் வழங்குகிறது. இங்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தின் ஏழு நாட்களும் குளம் திறந்திருக்கும்.

ஒய்எம்சிஏ நீச்சல் குளம், நந்தனம்

நந்தனம், அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் இந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இது ஏழு நாட்களும் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இங்கு மாதத்திற்கு, ரூ.1,800 செலுத்த வேண்டும்.

வேவ்ஸ் ஸ்விம்மிங் அகாடமி, பல்லாவரம்

publive-image

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேவ்ஸ் ஸ்விம்மிங் அகாடமி, குழந்தைகள், பெரியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்கு நீச்சல் வசதிகள் மற்றும் படிப்புகளை வழங்குகிறது.

போட்டிக்கான நீச்சல் வகுப்புகள், மேம்பட்ட நீச்சல் பயிற்சி, நீர் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை நீச்சல், ஆட்டிசம் அல்லது டவுன் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உதவி நீச்சல் அமர்வுகள் உள்ளிட்ட திட்டங்கள் இங்கு உள்ளன.

இங்கு வாரத்தின் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாய். உறுப்பினர் சேர்க்கைக்கு மாதம் ரூ.4,000 செலவாகும். தொடர்புக்கு: 044-49597004

எம்ஏவி நீச்சல் குளம், சேலையூர்

கிழக்கு தாம்பரம் சேலையூரில் அமைந்துள்ள எம்ஏவி நீச்சல் குளம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 முதல் மாலை 3 மணி வரையிலும், மற்றும் வார இறுதி நாட்களில், காலை 10:30 முதல் இரவு 7:30 வரை திறந்திருக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.120, குழந்தைக்கு ரூ.100 செலுத்த வேண்டும். 044-22276060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

MJL நீச்சல் குளம், கேம்ப் ரோடு

சென்னை சேலையூரில் கேம்ப் ரோடு எண் 10ல் அமைந்துள்ள இந்த குளம் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலவாகும். இங்கு குழந்தைகளுக்கு மாதம் ரூ 2500 மற்றும் பெரியவர்களுக்கு மாதம் ரூ 3000 கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறது. தொடர்பு எண் 9841470360.

எஸ்பி நீச்சல் அகாடமி, போரூர்

போரூரில் உள்ள எஸ்பி நீச்சல் அகாடமி உள்ளரங்க குளம். இது புதன் முதல் திங்கள் வரை வாரத்தில் ஆறு நாட்கள் திறந்திருக்கும், செவ்வாய் விடுமுறை. குறிப்பிட்ட நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளம் திறந்திருக்கும். தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை, பெண்களுக்காக பிரத்யேகமாக திறந்திருக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு, ரூ.150 செலுத்த வேண்டும். தொடர்பு எண் 9962282613.

அனைத்து நீச்சல் குளங்களுக்கும் பொதுவான விதிகள்:

- உங்கள் சொந்த நீச்சலுடை எடுத்து வர வேண்டும்.

- கண்ணாடி மற்றும் ஷவர் கேப் கட்டாயம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment