தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில் இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்த 48 மணி நேர்த்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
அதே நேரத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"