/indian-express-tamil/media/media_files/2025/02/08/c7ySm8yuJosBD6e8jpUE.jpg)
பயணிகளின் வசதிக்கேற்பு சென்னையில் இருந்து காஷ்மீர் வரை பாரத் கௌரவ் சுற்றுலா ரயில், வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் விலை, வழித்தடங்கள் ஆகியவை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில், ஆக்ரா, டெல்லி மற்றும் அமிர்தசரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாஜ் மஹால், சிக்ரி, பொற்கோயில் உள்ளிட்ட இடங்களை காண்பதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகரங்களிலும் ரயில் நிறுத்தப்படும் போது, பயணிகள் தங்கள் பொருட்களை ரயிலிலேயே வைத்து விட்டு செல்லலாம். அதன்படி, ரயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பயணிகள் தங்களுக்கு தேவையான சிறிய பைகளை எடுத்து கொண்டு வேன் மற்றும் பேருந்துகளில் சென்று சுற்றிப் பார்க்கலாம். இரவு நேரத்தில் தங்குவதற்கு உணவு விடுதிகளிலும் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் தயாரிக்கப்படும் தென்னிந்திய சைவ உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படும். 650 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவிற்கு 33 சதவீதம் ரயில்வே மானியம் வழங்கப்படுகிறது. www.tourtimes.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது 7305858585 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.